யாப் ஆ லோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாப் ஆ லோய்
Yap Ah Loy.jpg
நவீன கோலாலம்பூரின் நிறுவனர்
பதவியில்
1868–1885
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 14, 1837(1837-03-14)
ஹுயுசோ, குவாங்டொங், சீனா
இறப்பு 15 ஏப்ரல் 1885
கோலாலம்பூர்
இருப்பிடம் கோலாலம்பூர், மலேசியா

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் யாப்.

யாப் ஆ லோய் (Yap Ah Loy, சீனம்: , 14 மார்ச்சு 1837-15 ஏப்ரல் 1885), (பிற பெயர்கள் யாப் தேட் லோய் மற்றும் யாப் மா லான்) நவீன கோலாலம்பூரை நிறுவியவராக கருதப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் கோலாலம்பூரை ஓர் வணிக மற்றும் சுரங்கத்தொழில் நகரமாக இவர் உருமாற்றினார். மலேசிய சீனர் குடியிருப்புகளின் தலைவராக இருந்த யாப் ஆ லோய் கோலாலம்பூரின் சீன காப்பிதானாக பிரி்த்தானியர்களால் நியமிக்கப்பட்டார். இந்த காலத்தில் அவர் சட்ட சீர்திருத்தங்களையும் புதிய சட்ட முறைமையையும் கொணர்ந்தார். ஆறு பேர் கொண்ட காவல்துறை கொண்டு சட்ட ஒழுங்கை நிலை நாட்டினார். 60 பேர் வரை இருக்கக்கூடிய சிறைச்சாலையைக் கட்டினார். கோலாலம்பூரின் முதல் பாடசாலையையும், பெடலிங் சாலையில் மரவள்ளிக்கிழங்கு ஆலையையும் நிறுவினார்.

இன்று கோலாலம்பூரின் சீனப்பகுதியின் மையத்திலுள்ள சாலை யொன்று இவரது பெயரைக் கொண்டு 'ஜாலன் யாப் ஆ லோய்' (யாப் ஆ லோய் சாலை) வழங்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாப்_ஆ_லோய்&oldid=3256129" இருந்து மீள்விக்கப்பட்டது