சிங்கப்பூர் காலனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெமாசிக் 14வது நூற்றாண்டிலேயே பிரசித்திப் பெற்ற ஒரு துறைமுகமாக விளங்கியது. மஹாபாகிட் வல்லரசின் ஆட்சியிலும் மலாக்கா சுல்தானிய ஆட்சியின் வர்த்தக மையமாக இருந்தது அன்றைய சிங்கப்பூர். கடல்வழி வர்த்தகத்துக்குப் பொருத்தமான இதன் அமைப்பைப் பயன்படுத்திய டச்சுக்காரர்களையும் போர்ச்சுகீசியர்களையும் விரட்டிவிட எண்ணிய பிரிட்டிஷ் தனது ஆதிக்கத்தை உறுதிபடுத்தியது.

1819ஆம் ஆண்டில் சர் ஸடாம்போர்ட் ராபிள்ஸ் ஆளுநராக சிங்கப்பூர் வந்தடைந்தார். இங்கு துறைமுகப்பட்டினம் அமைப்பதால் சீனா மற்றும் மலாக்கா நீரிணை வர்த்தகத்தைப் பிடித்துவிடலாம் என்று கருதி சிங்கப்பூரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தளம் அமைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

சிங்கப்பூர் காலனி (Colony of Singapore) 1946ஆம் ஆண்டிலிருந்து 1963ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்த அது, ஜப்பான் இறுதியில் ‘ஆலாய்ட்ஸ் ‘இடம் சரணடைந்தபோது, 1945ஆம் ஆண்டில் மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்படுத்தப்பட்டது.

1946இல் ஸ்ட்ரெய்ட்ஸ் குழுமங்கள் களைந்தது. சிங்கப்பூரும் கோகோஸ்-கீலிங்கும் கிரிஸ்துமஸ்  தீவும் ஒரு தனி ஆட்சியை உருவாக்கின. அந்த மன்னராட்சி- உள்ளூர் தன்னாட்சி முறை (partial internal self-governance) சுதந்திரம் கிடைக்கும் வரை பிரிட்டிஷ்  ஆட்சியின் அதிகாரத்துக்கு உட்பட்டிருந்தது.

இரண்டாம் உல்கப் போர்[தொகு]

ஜப்பான் சரணடைந்த பின்பு பிரிட்டிஷ் சிங்கப்பூருக்குப் பொறுப்பு வகிக்காததால் சிங்கப்பூரர்களிடையே பெருங் குழப்பம் ஏற்பட்டது. பல திருட்டு, கொலை, பழி வாங்குதல் போன்ற குற்றச் சம்பவங்கள் நாடு முழுவதும் பரவின. செப்டம்பர் 1945இல் பிரிட்டிஷ் படை மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தது. ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்கள் சாலைகளில் நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர். செப்டம்பர் 1945 முதல் மார்ச் 1946 வரை சிங்கப்பூர், பிரிட்டிஷ் இராணுவத்தால் ஆளப்பட்டது.

ஆனால், உணவு-அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது சில நோய்களுக்கு வழிவகுத்தது. வேலை வாய்ப்புகள் இல்லை. உணவு விலைகள் கூடின. இதனால் மக்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். காலம் செல்ல செல்ல பிரிட்டிஷாரின் செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. மக்கள் நம்பிக்கை இழந்தனர் 1949-1959 வரை பீரீட்டிஷ் கிரௌன் காலினியாகவும் அதன்பிறகு தீபகற்ப மலேசியாவுடனும் இருந்த சிங்கப்பூர் 1963-இல் சுதந்திரம் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_காலனி&oldid=3527736" இருந்து மீள்விக்கப்பட்டது