உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய சட்டம் 1963

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய சட்டம் 1963
Malaysia Act 1963
நீளமான தலைப்புமலாயா கூட்டமைப்பின் மாநிலங்களுடன் வடக்கு போர்னியோ, சரவாக் மற்றும் சிங்கப்பூர் நிலப்பகுதிகளை இணைப்பதற்கான சட்டம்.
அதிகாரம்1963 Chapter 35
நாட்கள்
அரச ஒப்புமை31 சூலை 1963
மற்ற சட்டங்கள்
தொடர்புடைய சட்டம்British Nationality Act 1981
British Overseas Territories Act 2002
நிலை:
Text of statute as originally enacted
மலேசிய சட்டம் 1963 (1963 C 35) (ஆவணம்) at Wikisource page Wikisource Commons page Commons

மலேசிய சட்டம் 1963 (Malaysia Act 1963, (1963 C 35); மலாய்: Akta Malaysia 1963 சீனம்: 1963 年马来西亚法令) என்பது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு நாடாளுமன்றச் சட்டம் (Act of Parliament of the United Kingdom) ஆகும். இந்தச் சட்டம் 1963 சூலை மாதம் 31-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது.[1]

இந்தச் சட்டம் பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo), பிரித்தானிய சரவாக் முடியாட்சி (Crown Colony of Sarawak) மற்றும் சிங்கப்பூர் மாநிலங்களை; அப்போது இருந்த மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) மாநிலங்களுடன் இணைத்தது. அந்தக் கூட்டமைப்பிற்கு மலேசியா என்று பெயர் வைக்கப்பட்டது.[2]

பொது

[தொகு]

இந்தச் சட்டத்தின் விளைவாக, மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்பது 1963 செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி மலேசியா (Malaysia) என மறுபெயரிடப்பட்டது.[3]

1965 ஆகத்து மாதம் 9-ஆம் தேதி, மலேசியாவின் ஒரு மாநிலமாக இருந்த சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. விடுதலை பெற்ற ஒரு நாடாக தன்னை மாற்றிக் கொண்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "An Act to make provision for and in connection with the federation of North Borneo, Sarawak and Singapore with the existing States of the Federation of Malaya. [31st July 1963]" (PDF). பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.
  2. காண்க: மலாயா கூட்டமைப்பு விடுதலைச் சட்டம் 1957
  3. myGovernment : History of the Constitution – The basis of the Federal Constitution of Malaysia is the Constitution of the Federation of Malaya. பரணிடப்பட்டது 19 திசம்பர் 2012 at Archive.today
  4. "On 9 August 1965, Singapore separated from Malaysia to become an independent and sovereign state. The separation was the result of deep political and economic differences between the ruling parties of Singapore and Malaysia, which created communal tensions that resulted in racial riots in July and September 1964". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிமூலத்தில் Hansard of Parliament of the United Kingdom (1963) – Malaysia Bill பற்றிய ஆக்கங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_சட்டம்_1963&oldid=4110490" இலிருந்து மீள்விக்கப்பட்டது