பெர்த்திராம் புரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்த்திராம் புரூக்
Bertram Brooke
முடிசூட்டுதல்துவான் மூடா சரவாக்
Tuan Muda of Sarawak
பிறப்பு(1876-08-08)8 ஆகத்து 1876
இறப்பு15 செப்டம்பர் 1965(1965-09-15) (அகவை 89)
வாழ்க்கைத் துணைகள்கிளாடிஸ் மில்டன் பால்மர்
(Gladys Milton Palmer)
குழந்தைகளின்
பெயர்கள்
1. ஜீன் புரூக்
Jean Brooke
2. எலிசபெத் புரூக்
Elizabeth Brooke
3. அன்னே புரூக்
Anne Brooke
4. அந்தோனி புரூக்
Anthony Brooke
மரபுபுரூக் வம்சாவழி
அரசமரபுவெள்ளை இராஜா
தந்தைசார்லசு புரூக்
தாய்மார்கரெட் புரூக்
மதம்கிறிஸ்துவம்

பெர்த்திராம் புரூக் அல்லது துவான் மூடா சரவாக் பெர்த்திராம் புரூக் (ஆங்கிலம்: Bertram Brooke அல்லது Captain Bertram Willes Dayrell Brooke; மலாய்: Tuan Muda Sarawak Kapten Bertram Willes Dayrell Brooke) (பிறப்பு: 8 ஆகஸ்டு 1876 – இறப்பு: 15 செப்டம்பர் 1965), என்பவர் சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில்; சரவாக் இராச்சியத்தில் துவான் மூடா சரவாக் எனும் இளவரசர்.[1]

பெர்த்திராம் புரூக், வெள்ளை இராஜா புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜாவான சார்லசு புரூக் (Charles Brooke) என்பவரின் இரண்டாவது மகனாவார். மூன்றாவது இராஜா சார்லசு வைனர் புரூக்கின் தம்பியாவார். சரவாக்கின் துவான் மூடா (Tuan Muda of Sarawak) பதவி வகித்தவர். தாயாரின் பெயர் இராணி மார்கரெட் ஆலிஸ் லிலி டி விண்ட் (Ranee Margaret Alice Lili de Windt).[2]

பொது[தொகு]

வெள்ளை இராஜா, (White Rajahs அல்லது Rajah of Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சி. அதுவே ஒரு முன்னாள் மன்னராட்சி ஆகும்.

1840-ஆம் ஆண்டுகளில், போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியம் ஆட்சி செய்தது.

வரலாறு[தொகு]

பெர்த்திராம் புரூக் இங்கிலாந்து லண்டன் நகரில் பிறந்தவர். இங்கிலாந்து வின்செஸ்டர் கல்லூரியில் (Clevedon, Winchester College) படித்தவர். முதலாம் உலகப் போரின் போது ஐக்கிய இராச்சியத்தின் அரசக் குதிரைப் படையில் (Royal Horse Artillery) சேவை செய்தவர். பின்னர் சரவாக் பொது சேவையில் இணைந்தார்.[3]

பெர்த்திராம் புரூக் 28 ஜூன் 1904-இல் கிளாடிஸ் மில்டன் பால்மர் (Gladys Milton Palmer) என்பவரை மணந்தார். துவான் மூடாவின் மனைவியாக, கிளாடிஸ் மில்டன் பால்மர் "டாயாங் மூடா" (Dayang Muda) என்ற பட்டத்தையும் "மாண்புமிகு" (Her Highness) எனும் அழைப்புப் பாணியையும் பெற்றார்.

இவர்களுக்கு ஒரு மகன். பெயர் அந்தோனி புரூக். மூன்று மகள்கள்: ஜீன் புரூக்; எலிசபெத் புரூக்; அன்னே புரூக்.

பெர்த்திராம் புரூக், 1965 செப்டம்பர் 15-ஆம் தேதி லண்டன் மாநகரில் காலமானார்.[2]

புரூக் வம்சாவழியினர்[தொகு]

பெயர் தோற்றம் பிறப்பு இறப்பு
ஜேம்சு புரூக்
(1841–1868)
29 ஏப்ரல் 1803, இந்தியா 11 ஜூன் 1868, இங்கிலாந்து
ஜோன் புரூக்
Rajah Muda of Sarawak
(1859–1863)
1823, இங்கிலாந்து 1 டிசம்பர் 1868, இங்கிலாந்து
சார்லசு புரூக்
(1868–1917)
3 ஜுன் 1829, இங்கிலாந்து 17 மே 1917, இங்கிலாந்து
சார்லசு வைனர் புரூக்
(1917–1946)
26 செப்டம்பர் 1874, இங்கிலாந்து 9 மே 1963, இங்கிலாந்து
பெர்த்திராம் புரூக்
Tuan Muda of Sarawak
(1917–1946)
8 ஆகஸ்டு 1876, சரவாக் 15 செப்டம்பர் 1965, இங்கிலாந்து
அந்தோனி புரூக்
Rajah Muda of Sarawak
(1939–1946)
10 டிசம்பர் 1912, இங்கிலாந்து 2 மார்ச் 2011, நியூசிலாந்து

மேற்கோள்கள்[தொகு]

  1. "Brooke, Bertram Willes Darrel (BRK897BW)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  2. 2.0 2.1 "Person Page". Thepeerage.com. பார்க்கப்பட்ட நாள் 30 December 2017.
  3. Walter Morley Fletcher (2011). The University Pitt Club: 1835–1935 (First Paperback ). Cambridge: Cambridge University Press. பக். 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-107-60006-5. 

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • The Brooke Trustபுரூக் வம்சத்தின் பாரம்பரியம் பற்றிய கூடுதல் தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்த்திராம்_புரூக்&oldid=3905802" இலிருந்து மீள்விக்கப்பட்டது