சிலிம் ரிவர் போர்

ஆள்கூறுகள்: 4°3′N 101°18′E / 4.050°N 101.300°E / 4.050; 101.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலிம் ரிவர் போர்
Battle of Slim River
இரண்டாம் உலகப் போர் பகுதி
Newly-arrived Indian troops.jpg
1941 நவம்பர் மாதம் சிங்கப்பூரில் வந்து இறங்கிய இந்திய துருப்புக்கள். சிலிம் ரிவர் போரில் இரண்டு படைப்பிரிவுகள் முற்றாக அழிக்கப்பட்டன.
நாள் 6–8 ஜனவரி 1942
இடம் சிலிம் ரிவர், தீபகற்ப மலேசியா
ஜப்பானியர் வெற்றி
பிரிவினர்
இந்தியா 11-ஆவது இந்தியக் காலாட்படை (11th Infantry Division) சப்பானியப் பேரரசு 5-ஆவது இம்பீரியல் ஜப்பானிய இராணுவம் (Imperial Japanese Army)
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஆர்க்கிபால்ட் பாரிஸ் (Archibald Paris) சப்பானியப் பேரரசு ஹாஜிமே ஷிமாடா Hajime Shimada
இழப்புகள்
500 இறப்பு
3,200 பிடிபட்டனர்[1]
(ஜப்பானியர் மதிப்பீடு)
17 இறப்பு
60 காயம் அடைந்தவர்கள்[1]
(ஜப்பானியர் மதிப்பீடு)
போர் அத்துமீறல்
தீபகற்ப மலேசியா

சிலிம் ரிவர் போர் (ஆங்கிலம்: Battle of Slim River; மலாய்: Pertempuran di Slim River) என்பது 1942-ஆம் ஆண்டு சனவரி மாதம் பிரித்தானிய இந்திய இராணுவத்திற்கும் அரச சப்பானிய இராணுவத்திற்கும் இடையே தீபகற்ப மலேசியா, பேராக் மாநிலத்தின் சிலிம் ரிவர் பகுதியில் நடந்த போராகும்.

போர் முனையில் இந்திய இராணுவத்திற்கு அவசரமாகத் தேவைப்பட்ட ஆயுதங்கள்; மருந்துகள்; உணவு நீர் வகைகள்; தொலைத் தொடர்பு சாதன வசதிகள்; பின்னணிக் காப்புகள் உடனடியாகக் கிடைக்கவில்லை. அதனால் நிராதிபதிகளான 500-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டார்கள்.

காயங்கள் அடைந்து நடக்க முடியாமல் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் பலரை சப்பானியப் படையினர் கத்தியால் குத்திக் கொன்று உள்ளனர். சிலரைச் சுட்டுக் கொன்று உள்ளனர். ஓரளவிற்கு நடக்க முடிந்த இராணுவ வீரர்களைக் கொண்டு குழிகள் தோண்டப் பட்டன. [1]கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் அந்தக் குழிகளில் புதைக்கப் பட்டனர். ஜப்பானியர்களின் மலாயா படையெடுப்பின் போது நடத்தப் பட்ட போர் அத்துமீறல்களில் இதுவும் ஒன்றாகும். [2]

பின்புலம்[தொகு]

1941 டிசம்பர் 7-ஆம் தேதி சப்பானியப் படைகள் கிழக்கு மலாயா, கிளாந்தான், கோத்தா பாருவில் தரை இறங்கினர். அடுத்த நான்கு நாட்களில், அதாவது 1941 டிசம்பர் 11-ஆம் தேதி, தென் தாய்லாந்தில் இருந்து வடமேற்கு மலாயாவில் படை எடுத்தனர். பிரித்தானிய படைகள் தொடுத்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி மலாயா மேற்குக் கரையில் முன்னேறி வந்தனர். கிறித்துமசு தினத்திற்குள் சப்பானியர்கள் வடமேற்கு மலாயா முழுவதையும் கைப்பற்றி விட்டனர்.

சப்பானியர்கள் மலாயாவுக்குள் அதிவேகமாகப் படை நடத்தி வருவதைப் பிரித்தானிய படைகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சப்பானியர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் கம்பார் நகரத்திற்கு அருகே கோலா டிப்பாங் ஆற்றுப் பகுதியில் (Dipang River) மட்டுமே சப்பானியர்களுக்கு முதன் முறையாகத் தடை ஏற்பட்டது.[2]

கம்பார் போர்[தொகு]

கம்பாரில் நான்கு நாட்கள் போர் நடந்தது. இந்தப் போருக்குக் கம்பார் போர் (Battle of Kampar) என்று பெயர். பிரித்தானியப் படையின் பீரங்கித் தாக்குதல்களினால் சப்பானியர்கள் பெரும் உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டி வந்தது.[1]

கம்பார் நகருக்குத் தெற்கே இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படை பிரிவு முகாம் அமைத்தது. அங்கு இருந்து பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது.. இருப்பினும் சப்பானியர்களுக்குக் கடலோரத் தரையிறக்கங்கள் (seaborne landings) சாதகமாக அமைந்து விட்டன. அங்கு இருந்து அதிகமான சப்பானியப் போர் வீரர்கள் கம்பாரில் களம் இறக்கப் பட்டனர்.

அதனால் இந்திய இராணுவத்தினரால் சமாளிக்க முடியவில்லை. பின்வாங்க வேண்டிய இக்கட்டான நிலைமை. துரோலாக் நகருக்கு வடக்கே ஐந்து மைல்கள் தொலைவில் உள்ள சிலிம் ரீவர் பகுதிக்குப் பின்வாங்கினர். எதிர்த் தாக்குதலுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.[1]

தளபதி மேஜர்-ஜெனரல் பாரிஸ்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது மலாயா சாலை ஒன்றில் இந்திய இராணுவத்தினர் அணிவகுத்துச் செல்கின்றனர்.

துரோலாக் கிராமப்புற நகருக்குச் செல்லும் இடத்தில் பிரித்தானிய படையினர் தங்களின் தற்காப்பு அரண்களை வலுவாக அமைத்தார்கள். நான்கு மைல்களுக்குக் காட்டுப் பாதையில் இரு மருங்கிலும் அந்த அரண்கள் அமைக்கப் பட்டன.

அதற்கு அடுத்து ஐந்து மைல்களுக்கு குளுனி தோட்டம் வரையிலும் கூடுதலாகத் தற்காப்பு அரண்கள் அமைக்கப் பட்டன. இந்த அரண்களைத் தாண்டித் தான் சிலிம் ரீவர் இரயில் பாலம் வருகிறது. அங்கேயும் பலமான தற்காப்பு நிலைகளை அமைத்தார்கள்.

ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போராடிய அனைத்து இந்தியக் காலாட் படைகளுக்கும் பிரிட்டிஷ் தளபதி மேஜர்-ஜெனரல் பாரிஸ் என்பவர் தலைமை தாங்கினார் (Major-General Paris - Commander of the 12th Indian Infantry Brigade). இவருக்கு உதவியாக ஒவ்வொரு காலாட் படைக்கும் துணைத் தளபதிகள் இருந்தார்கள். மூன்றுமே காலாட் படைகள்.

5/16-வது காலாட் படை[தொகு]

ஏற்கனவே கம்பாரில் நடந்த போரில் மூன்று காலாட் படைப் பிரிவுகளில் ஒரு பிரிவு முற்றாக இழக்கப் பட்டது. எஞ்சியவை இரண்டு காலாட் படைப் பிரிவுகள்.

முதலாவது 5/16 எனும் காலாட் படை (5/16 Brigade). மற்றொன்று 12-வது பிரிவு காலாட் படை (12th Brigade). இவற்றில் 5/16-வது காலாட் படை சிலிம் ரிவர் தாண்டி பேராங் பகுதிக்கு அனுப்பப்பட்டது. ஒரு வகையில் அந்தப் படைக்கு ஓய்வு வழங்குவதாகவும் திட்டம்.

அப்படியே இந்திய இராணுவத்தின் 12-வது பிரிவு காலாட் படை, சிலிம் ரிவரில் தோல்வி அடைந்தால் 5/16 காலாட் படை பேராங் பகுதியில் ஜப்பானியர்களை எதிர்க்க வேண்டும். இதுதான் தளபதி பாரிஸ் அவர்களின் வியூகம்.

இந்திய இராணுவத்தின் 12-வது காலாட் படை[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவில் இந்திய இராணுவத்தின் 12-வது காலாட் படையைச் சேர்ந்த கூர்கா படையினர்.

இந்திய இராணுவத்தின் 12-வது பிரிவு காலாட் படையுடன் மேலும் இதர சிறு படைகளும் இருந்தன. 12-வது பிரிவிற்கு இயான் ஸ்டீவர்ட் என்பவர் பொறுப்பு வகித்தார் (Lt.Col.Ian Stewart). 12-வது பிரிவில் மேலும் ஓர் உதவிப் படை இருந்தது. அதன் பெயர் 28-வது கூர்கா படை (28th Gurkha Brigade). இந்தப் படைக்கு ரே செல்பி என்பவர் பொறுப்பு வகித்தார் (Lt.Col.Ray Selby).

இதற்கு முன்னர் கம்பார் போரிலும் கிரீக் பகுதியில் (Grik Road) நடந்த சண்டைகளிலும் கூர்கா படையைச் சேர்ந்த பலர் பலியாகி விட்டார்கள். வீரர்கள் குறைவான நிலையில் தற்காப்பு நிலைகள் துரோலாக் பகுதியில் அவசரம் அவசரமாக உருவாக்கப் பட்டன.[1] சிலிம் ரிவர் குளுனி ரப்பர் தோட்டத்தில் இருந்து துரோலாக் வரையிலான சாலையின் இரு புறங்களிலும் 12-வது காலாட் படை தயார் நிலையில் வைக்கப்பட்டது. 12-வது காலாட் படையில் அப்போது ஏறக்குறைய 4000 இந்தியப் படை வீரர்கள் இருந்தார்கள்.

4/19-வது ஹைதராபாத் படையணி[தொகு]

இந்தியப் படை வீரர்கள் மலாயா வரலாற்றில் மறக்க முடியாத சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ளார்கள். மலாயாவில் நடந்த நான்கு போர்களில் இவர்களின் பங்கு அளப்பரியது.

ஆகிய நான்கு போர்களில் பல ஆயிரம் வீரர்கள் பலியாகி உள்ளனர். இரன்டாம் உலகப் போரின் போது, மலாயா நாட்டுப் பாதுகாப்பில் இந்தியப் படை வீரர்களின் தியாகங்கள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.[2]

இந்திய இராணுவத்தின் 12-வது காலாட் படையில் மற்றொரு படையணி இருந்தது. அதன் பெயர் 4/19-வது ஹைதராபாத் ரெஜிமென்ட் (4/19th Hyderabad Regiment). இந்த அணி ஜப்பானியர்களுக்கு எதிரான தடைகளையும் மற்றும் சாலைத் தடுப்புகளையும் ஏற்படுத்தியது.[3]

5/2-வது பஞ்சாப் படையணி[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது மலாயா மீது ஜப்பானியர்கள் படையெடுப்பு: தேதி விவரங்கள் வரைபடம்.

மற்றும் ஒரு படையணி 5/2-வது பஞ்சாப் ரெஜிமென்ட் (5/2nd Punjab Regiment). இதுதான் கடைசியாக நின்ற எதிர்ப்பு அணி. இதுவும் எதிர்ப்பார்ப்புத் தயார் நிலையில் இருந்தது. இந்திய இராணுவத்தில் பஞ்சாப் படையணி பழைமையானது. 1922-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது.[4]

இதைப் போலவே இன்னோர் அணி 2-வது ஆர்கில் மற்றும் சதர்லேண்ட் ஹைலேண்டர்ஸ் (2nd Argyll and Sutherland Highlanders). இங்கிலாந்தில் இருந்து நேரடியாகக் களம் இறக்கப்பட்ட அணி. தற்காப்பு நிலையில் வைக்கப்பட்டது. ஆனால் இவர்களிடம் நிலையான பீரங்கி எதிர்ப்பு தடைகள் இல்லை. இவர்களைப் பாதுகாக்க சாலைத் தடுப்புகளும் இல்லை.[5]

துரோலாக் கிராமத்தில் இருந்து சிலிம் ரிவர் பாலம் வரையில் நீண்டு இருந்த பிரதான சாலையிலும்; இரயில் பாதையிலும் 28-வது கூர்கா படையினர் பரவலாக நிறுத்தி வைக்கப் பட்டனர். எந்தக் கட்டத்திலும் சிலிம் ரிவர் பாலம் தகர்த்து எறியப் படுவதற்கான தயார் நிலையில் இருந்தது.

இந்திய இராணுவத்தின் 12-வது காலாட் படையின் எல்லாத் தடைகளையும் ஜப்பானியர்கள் மீறி முன்னேறி வரலாம். எதிர்பார்ப்புகள் இருந்தன. சிலிம் ரிவர் நகரத்தை நோக்கிப் படைகளை நகர்த்தலாம். வாய்ப்புகள் இருந்தன. அப்படி மீறி வந்தால் முன்னேற்பாடாகச் சிலிம் ரிவர் பாலத்தைத் தகர்த்து எறிவது என முடிவு செய்யப் பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Warren, Alan (2006). Britain's Greatest Defeat: Singapore 1942 (Illustrated ). Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85285-597-5. https://books.google.com/books?id=zosKzAoocu8C. 
  2. 2.0 2.1 2.2 Smith, Colin (2006). Singapore Burning. Great Britain: Penguin Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-101036-6. 
  3. Gardner, Brian. "Orders of Battle.com". 2009-10-07 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2021-05-01 அன்று பார்க்கப்பட்டது.
  4. THE PUNJAB REGIMENT.
  5. The Argyll & Sutherland Highlanders have a long and distinguished record of service. .

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிம்_ரிவர்_போர்&oldid=3488843" இருந்து மீள்விக்கப்பட்டது