கம்போங் மேடான் துர்நிகழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்போங் மேடான் துர்நிகழ்ச்சி என்பது 2001ஆம் ஆண்டு, மார்ச் 4இல் இருந்து மார்ச் 8வரையில், ஐந்து நாட்களுக்கு இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற ஓர் இனக் கலவர நிகழ்ச்சியாகும். மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் இருக்கும் கம்போங் மேடான், கம்போங் காந்தி, கம்போங் லிண்டோங்கான், கம்போங் டத்தோ ஹருண், தாமான் தேசா ரியா போன்ற புறநகர்ப் பகுதிகளில் இந்தக் கலவரம் நடைபெற்றது. [1]

அண்டை வீட்டுக்காரர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு கைகலப்பில் இறங்கியதே இந்தக் கலவரத்திற்கு மூலகாரணமாக அமைந்தது . ஒரு மலாய்க்காரர் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அருகாமையில் இருந்த இந்தியரின் வீட்டில் ஓர் இறப்பு நிகழ்ச்சி. இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதங்கள். அந்த வாக்குவாதங்கள் முற்றிப்போய் கைகலப்பில் முடிந்தன. 200 பேர் கைகலப்பில் ஈடுபட்டனர். கைகலப்பில் கல்ந்து கொண்டவர்கள் கம்போங் மேடானுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் ஆகும். இந்த துர்நிகழ்ச்சியை எ.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்தது. [2]

மேற்கோள்கள்[தொகு]