உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய வடக்கு
போர்னியோ முடியாட்சி
Crown Colony of North Borneo
1946–1963
கொடி of North Borneo
கொடி
சின்னம் of North Borneo
சின்னம்
நாட்டுப்பண்: God Save the King (1946–1952)
God Save the Queen (1952–1963)
North Borneoஅமைவிடம்
நிலைபிரித்தானிய காலனி
தலைநகரம்செசல்டன்
பேசப்படும் மொழிகள்ஆங்கிலம், பஜாவு, மூருட், சீனம், கடசான், டூசுன், சபா மலாய்
அரசாங்கம்முடியாட்சி காலனி
அரசர் 
• 1946–1952
ஆறாம் ஜோர்ஜ்
• 1952–1963
இரண்டாம் எலிசபெத்
ஆளுநர் 
• 1946–1949
எட்வர்டு துவினிங்
• 1959–1963
வில்லியம் கூடே
வரலாற்று சகாப்தம்புதிய பேரரசுவாதம்
• பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி காலனி
15 சூலை 1946[1]
16 அக்டோபர் 1947
31 ஆகத்து 1963[2][3]
16 செப்டம்பர் 1963
நாணயம்வடக்கு போர்னியோ டாலர்,
மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர்
முந்தையது
பின்னையது
போர்னியோவில் பிரித்தானிய இராணுவ நிருவாகம்
வடக்கு போர்னியோ
பிரித்தானிய லபுவான் முடியாட்சி
மலேசியா
பலவான்
சபா
சூலு சுல்தானகம்
தற்போதைய பகுதிகள்மலேசியா

பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo; மலாய்: Tanah Jajahan Mahkota Sarawak) என்பது 1946-ஆம் ஆண்டில், போர்னியோ தீவில் பிரித்தானிய முடியாட்சியின் (Crown Colony) கீழ் இருந்த ஒரு நிலப்பகுதியாகும்.

1946 சூலை 1-ஆம் தேதி வரையில், சரவாக் மாநிலத்தைத் தற்காலிகமாக நிருவாகம் செய்த பிரித்தானிய இராணுவ நிருவாகம் (British Military Administration - Borneo) கலைக்கப்பட்ட பிறகு, சரவாக் மாநிலத்தில் பிரித்தானிய சரவாக் முடியாட்சி நிறுவப்பட்டது.

பொது

[தொகு]
1946 இல் வடக்கு போர்னியோ குழந்தைகள்

1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா கூட்டமைப்பு (Federation of Malaysia) உருவாக்கப்பட்டது. அதன் மூலம் பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo) என்பது சபா மாநிலம் (State of Sabah) என்று புதிய பெயரைப் பெற்றது.

அப்போதைய பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் துணைத் தலைவராக (Vice-Chairman of BNBC) சர் சார்லசு செசல் (Sir Charles Jessel) என்பவர் இருந்தார். அவருடைய பெயர் செசல்டன் நகருக்கு வைக்கப்பட்டது.

பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்

[தொகு]

பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (British North Borneo Company என்பது வடக்கு போர்னியோ எனும் சபா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பிரித்தானிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1881 நவம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

1888-ஆம் ஆண்டில் வடக்கு போர்னியோ பகுதி (இன்றைய சபா மாநிலம்) பிரித்தானிய பேரரசின் பாதுகாப்புப் பகுதியாக மாறியது. ஆனாலும் 1946-ஆம் ஆண்டு வரை வடக்கு போர்னியோவின் நிர்வாகம் முழுவதும், பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி அரசாங்கத்தால் (Crown Colony of North Borneo) ஏற்றுக் கொள்ளப்படும் வரையில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனமே கவனித்துக் கொண்டது.[4]

காயா தீவு

[தொகு]

இதற்கிடையில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் 1890-இல் லபுவான் தீவை தற்காலிகமாக நிர்வாகம் செய்தது. பின்னர் இந்த லபுவான் பகுதி, நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பகுதியாக மாறியது.

1882-ஆம் ஆண்டில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு, சபாவை ஆட்சி செய்வதற்கான உரிமை கிடைத்து ஓர் ஆண்டு கழித்து, காயா தீவில் (Gaya Island) ஒரு புதிய குடியேற்றத்தை நிறுவியது.[5]

வடகிழக்கு போர்னியோ

[தொகு]

1963-ஆம் ஆண்டுக்கு முன்னர் சபா மாநிலம், செசல்டன் (Jesselton) என்று பொதுவாக அறியப்பட்டது. செசல்டன் என்பது இப்போதைய கோத்தா கினபாலு மாநகரைக் குறிப்பிடுவதாகும். 1967 டிசம்பர் 22-ஆம் தேதி, கோத்தா கினபாலு என சபா மாநில சட்டமன்றம் மாற்றம் செய்தது.[6]

1947-ஆம் ஆண்டிற்கு முன்னர், வடகிழக்கு போர்னியோவில் ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் ஆமைத் தீவுகள் (Turtle Islands), தாவி தாவி தீவுகள் (Tawi-Tawi Islands), மாங்சி தீவுகள் (Mangsee Islands) எனும் ஏழு தீவுகள் (British-Controlled Islands) இருந்தன.

ஐக்கிய இராச்சியம் - ஐக்கிய அமெரிக்கா ஒப்பந்தம்

[தொகு]

1947 அக்டோபர் 16-ஆம் தேதி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா (United States) ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் அந்த ஏழு தீவுகளும் பிலிப்பீன்சு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.[7][8]

அந்தத் தீவுகள் இப்போது பிலிப்பீன்சு நாட்டின் தென்மேற்கு தகலாகு (Southwestern Tagalog Region) மிமரோபா (Mimaropa) பிராந்தியம்; மற்றும் முசுலிம் மிண்டனாவோவின் பாங்சமோரோ தன்னாட்சிப் பகுதி (Bangsamoro Autonomous Region); ஆகியவற்றின் ஒரு பகுதியாக உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anthony Kirk-Greene (12 June 1999). On Crown Service: A History of HM Colonial and Overseas Civil Services, 1837-1997. I.B.Tauris. pp. 183–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-260-9.
  2. "The National Archives DO 169/254 (Constitutional issues in respect of North Borneo and Sarawak on joining the federation)". The National Archives. 1961–1963. பார்க்கப்பட்ட நாள் 23 April 2015.
  3. Philip Mathews (28 February 2014). Chronicle of Malaysia: Fifty Years of Headline News, 1963-2013. Editions Didier Millet. pp. 15–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-10617-4-9.
  4. Treacher, W. H. (1891). British Borneo: sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo. Singapore, Govt. print. dept. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.
  5. Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
  6. Muzium Sabah (1992), Sabah's heritage : a brief introduction to Sabah's history and heritage, Sabah Museum, பார்க்கப்பட்ட நாள் 24 October 2013
  7. Charles P. Williamson (30 July 1929). "Treaty over Turtle Islands". The Telegraph (Nashua). பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
  8. Peter C. Richards (6 December 1947). "New Flag Over Pacific Paradise". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]