உள்ளடக்கத்துக்குச் செல்

குரூண் போர்

ஆள்கூறுகள்: 5°49′N 100°29′E / 5.817°N 100.483°E / 5.817; 100.483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரூண் போர்
Battle of Gurun
Pertempuran Gurun
பசிபிக் போர்
இரண்டாம் உலகப் போர் பகுதி

மலாயா தீபகற்பத்தின் வரைபடம். மேல் இடது புறத்தில், கெடா மாநிலத்தில் குரூண் அமைந்துள்ளது
நாள் 14–16 டிசம்பர் 1941
இடம் குரூண், கெடா, பிரித்தானிய மலாயா
  • சப்பானிய வெற்றி
  • 6-ஆவது இந்திய காலாட்படைக்கு சேதம்
பிரிவினர்
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு 11-ஆவது இந்திய காலாட்படை சப்பானியப் பேரரசு 5-ஆவது சப்பானிய அரச காலாட்படை
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் டேவிட் முரரே லியோன் சப்பானியப் பேரரசு தக்குமா நிசிமுரா
மலாயாவில் நடந்த போர்களில் ஈடுபட்ட இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படை போர் வீரர்கள்

குரூண் போர் (ஆங்கிலம்: Battle of Gurun; மலாய்: Pertempuran di Gurun) என்பது 14–16 டிசம்பர் 1941-இல்; பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படைக்கும், அரச சப்பானிய இராணுவத்திற்கும் இடையே தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் குரூண் நகரத்திற்கு வடக்கே 3 மைல் தொலைவில் நடந்த போராகும்.

சில நாட்களுக்கு முன்னர் ஜித்ராவில் நடந்த ஜித்ரா போருக்கு பிறகு, சப்பானிய இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க, பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படை முயன்றபோது இந்த குரூண் போர் நடைபெற்றது.

பின்னணி

[தொகு]

ஜித்ரா போரில் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படைக்கு டேவிட் முர்ரே லியோன் என்பவர் படைத் தளபதியாக இருந்தார். மிகப் பெரிய சப்பானியப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக டேவிட் முர்ரே லியோன் நம்பினார். அதனால் அவரின் படையினர் ஜித்ராவிலிருந்து வெளியேறும்படி பிரித்தானிய மலாயா படைகளின் தலைவர் ஆர்தர் பெர்சிவல் உத்தரவிட்டார்.

தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில்; மலேசிய எல்லையில், சில நாட்களுக்கு முன்னர் நடந்த குரோ போரில் சப்பானியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாமல் போனது. அதனால் பிரித்தானியக் கூட்டுப் படைகள்; பட்டாணியில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படை

[தொகு]

குரூண் பகுதி, இயற்கையில் மலைப்பாங்கான பகுதி. பிரித்தானியக் கூட்டுப் படைகளுக்கு தற்காப்பு அரணாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அந்த வகையில் சப்பானியப் படைகளின் முன்னேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தலாம் எனும் நம்பிக்கையில் பிரித்தானியக் கூட்டுப் படைகள் பின்வாங்க உத்தரவிடப்பட்டது.

ஜித்ராவிலிருந்து குரூணுக்கு பின்வாங்கும் படலம், பிரித்தானியக் கூட்டுப் படைககுப் பெரும் தோல்வியில் முடிந்தது. ஜித்ராவில் நடந்த போரில் ஏற்பட்ட இழப்புகளை விட அதிக இழப்புகள் ஏற்பட்டன.

போர் வீரர்கள் கொலை செய்யப்பட்டனர்

[தொகு]

பின்வாங்குவதற்கான உத்தரவு போர் முனையில் இருந்த பிரித்தானியக் கூட்டுப் படையினர் பலருக்குச் சென்றடையவில்லை. அவர்கள் பின்வாங்காமல் தொடர்ந்து போரிட்டு வந்தனர். அதனால் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படையின் பல துணைப் பிரிவுகள் ஜித்ராவில் கைவிடப்பட்டன.

அத்துடன் ஜித்ராவின் தெற்கில் உள்ள பாட்டா ஆற்றைக் கடக்க முயன்ற வீரர்கள் பலர் வெள்ளப் பெருக்கில் மூழ்கி உயிர்விட்டனர். ஒரு கட்டத்தில் முழு படைப் பிரிவுகளும் காணாமல் போய்விட்டன. பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படையின் போர் வீரர்களில் பலர் சப்பானியர்களால் பிடிக்கப்பட்டனர்; அல்லது கொலை செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரூண்_போர்&oldid=3937388" இலிருந்து மீள்விக்கப்பட்டது