மூவார் போர்

ஆள்கூறுகள்: 2°9′N 102°40′E / 2.150°N 102.667°E / 2.150; 102.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவார் போர்
Battle of Muar
Pertempuran Muar
மலாயா நடவடிக்கைபசிபிக் போர்
இரண்டாம் உலகப் போர் பகுதி

சனவரி 18, 1942 அன்று மூவார்-பாரிட் சூலாங் சாலையில் ஜப்பானியர்கள் மீது ஆஸ்திரேலியர்களின் தாக்குதல்.[1][2]
நாள் 14-22 சனவரி 1942
இடம் மூவார், பிரித்தானிய மலாயா
ஜப்பானிய வெற்றி
பிரிவினர்
 ஆத்திரேலியா
 ஐக்கிய இராச்சியம்
 இந்தியா
 சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
ஆத்திரேலியா கார்டன் பென்னட்
ஐக்கிய இராச்சியம் எர்பர்ட் டங்கன் 
ஆத்திரேலியா சார்லஸ் ஆண்டர்சன்
ஆத்திரேலியா பிரடெரிக் காலேகன்
தக்குமோ நிசிமுரா
மசாகாசு ஒகாகி
சிஜியோ கோதண்டா 
படைப் பிரிவுகள்
மேற்குப் படை:
ஆத்திரேலியா 8-ஆவது தரைப்படை
இந்தியா 9-ஆவது தரைப்படை
இந்தியா 45-ஆவது தரைப்படை
ஐக்கிய இராச்சியம் 53-ஆவது தரைப்படை
25-ஆவது இராணுவம்:
அரச இராணுவம்
5-ஆவது தரைப்படை
25-ஆவது இராணுவம்
3-ஆவது தரைப்படை
பலம்
4,000 தரைப்படை
60 வான் படை வானூர்திகள்
8,000 தரைப்படை
400 வான் படை வானூர்திகள்
இழப்புகள்
3,100 இறப்புகள்;
(காயம் அடைந்தோர்)
145 போர்க் கைதிகள்
பாரிட் சூலோங் படுகொலை
700+ இறப்புகள்;
800+ காயம் அடைந்தோர்

மொத்த சேதங்கள்: 1500+; காயம் அடைந்தோர்
15+ தகரிகள் அழிவு[3]

மூவார் போர் (ஆங்கிலம்: Battle of Muar; மலாய்: Pertempuran di Muar); என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், மலாயாவின் மீது சப்பானியர் படையெடுத்த போது, தீபகற்ப மலேசியா, ஜொகூர், மூவார் பகுதியில் 1942 சனவரி 14-ஆம் தேதியில் இருந்து 1942 சனவரி 22-ஆம் தேதி வரையில் நடைபெற்ற போரைக் குறிப்பிடுவதாகும்.

இந்தப் போர் கெமிஞ்சே பாலத்தை சுற்றிய பகுதியிலும்; மூவார் ஆற்றுப் பகுதியிலும் நடைபெற்றது. ஆஸ்திரேலிய இராணுவத்தின் 8-ஆவது தரைப்படைக்கும்; சப்பானிய இராணுவத்தின் 25-ஆவது பட்டாளத்தின் 5-ஆவது தரைப்படைக்கும் இடையே நடந்த இந்தப் போரில் ஆஸ்திரேலிய இராணுவத்திற்கு 3,100 உயிரிழப்புகள்; சப்பானிய இராணுவத்திற்கு 700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

மிகத் தீவிரமான போர் என்று அறியப்படும் இந்தப் போரின் போது பாரிட் சூலோங் எனும் இடத்தில், காயமடைந்து சரணடைந்த 150-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய, இந்தியப் போர்க் கைதிகளை, சப்பானிய இராணுவத்தினர் படுகொலை செய்தனர். அந்த துர்நிகழ்வு பாரிட் சூலோங் படுகொலை என அறியப்படுகிறது.

பொது[தொகு]

1945-இல் கெமிஞ்சே பாலம். இந்தப் பாலத்தின் சுற்றுப்பகுதியில், ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட சப்பானிய போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆஸ்திரேலிய இராணுவத்தின் 8-ஆவது தரைப்படையினர்
ஆஸ்திரேலிய இராணுவத்தின் சேதமுற்ற தகரிகள்

ஏற்கனவே சிலிம் ரிவர் போரில் பிரித்தானியக் கூட்டுப் படைகளுக்கு பல நூறு உயிரிழப்புகள் ஏற்பட்டன. அந்தப் பின்னடைவிற்குப் பிறகு, அமெரிக்க-பிரித்தானிய-இடச்சு-ஆஸ்திரேலிய இராணுவ அமைப்பின் (American-British-Dutch-Australian Command) (ABDACOM) தளபதியான ஆர்ச்சிபால்ட் வேவல், 3-ஆவது இந்தியப் படைகளின் தளபதியான லூயிஸ் ஈத் என்பவருக்கு ஒரு கட்டளையிட்டார்.

அதாவது தீபகற்ப மலாயாவின் வடக்குப் பகுதி மாநிலமான பேராக் மாநிலத்தில், போரில் ஈடுபட்டு வரும் இந்தியப் படைகள், 240 கிலோமீட்டர் (150 மைல்) தெற்கே இருக்கும் ஜொகூர் மாநிலத்திற்குப் பின்வாங்க வேண்டும்; பின்னர், ஓய்வெடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அந்தக் கட்டத்தில் மூவார் பகுதியில் 8-ஆவது ஆஸ்திரேலியப் பிரிவு, சப்பானியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது.

சப்பானியருக்கு பெரும் இழப்புகள்[தொகு]

நேச நாடுகளின் படைத்துறைக் கட்டளையாளர் கார்டன் பென்னட்டின் கட்டளையின் கீழ் நேச நாட்டு வீரர்கள், கெமிஞ்சே பாலத்திலும்; கிம்மாஸ் நகருக்கு வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் நடந்த இரண்டாவது போரிலும்; சப்பானியப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்தினர்.

மலாயா நடவடிக்கையில் வேறு எந்தப் போரிலும் இல்லாத அளவிற்கு இந்தப் போரில் அதிக இழப்புகளைச் சப்பானியர்கள் சந்தித்தனர். சப்பானிய தளபதி சிஜியோ கோதண்டா இந்தப் போரில்தான் கொல்லப்பட்டார். அந்தச் சோகம் சப்பானிய வீரர்கள் பலரின் மன உறுதியைத் தற்காலிகமாக சிதைத்தது.

இந்திய இராணுவத்தின் 45-ஆவது தரைப்படை[தொகு]

இந்த மூவார் போரில், ஆஸ்திரேலிய இராணுவத்தின் 8-ஆவது தரைப்படையினர், சப்பானிய இராணுவத்தின் 5-ஆவது பிரிவைச் சேர்ந்த 600 பேரை வீழ்த்தினர். அதே நேரத்தில் கிம்மாஸ் நகருக்கு வடக்கே நடந்த மற்றொரு போரில், ஆஸ்திரேலிய இராணுவத்தின் தகரி எதிர்ப்புப் பிரிவினர் பல சப்பானிய தகரிகளையும் அழித்தனர்.

நேச நாட்டுப் படைகளுக்கு மூவார் போர் தொடக்கத்தில் வெற்றிகரமாக இருந்த போதிலும், பின்னர் சில நாட்களில் மேற்கு கடற்கரையின் மூவார் மற்றும் பக்ரி பகுதிகளின் தற்காப்பு அரண் முறையாக அமையவில்லை என்பதால் நேச நாட்டுப் படைகளுக்கு இந்த மூவார் போர், தோல்வியில் முடிந்தது.

இதன் விளைவாக இந்தியத் தரைப்படையின் 45-ஆவது படை ஏறைக்குறைய அழிக்கப்படும் நிலைக்கு உள்ளானது. நேசநாடுகளின் இரண்டு ஆஸ்திரேலியத் தரைப்படைப் பிரிவுகளுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.[2]

இழப்புகள்[தொகு]

இந்தப் போரில், இந்திய இராணுவத்தின் 45-ஆவது தரைப்படைக்கு பெரிய அளவிலான இழப்புகள் ஏற்பட்டன. அந்தத் தரைப்படையின் அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டனர். மலாயா நடவடிக்கையின் கடைசி சில வாரங்களில் வரையிலும், இந்தப் படைப்பிரிவை மீண்டும் கட்டியெழுப்ப முடியவில்லை. அந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த 400 இந்திய வீரர்களும்; இரண்டு ஆஸ்திரேலிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த 500 வீரர்களும் மட்டுமே உயிர் தப்பினர்.[4]

அதன் பின்னர், இந்திய இராணுவத்தின் 45-ஆவது தரைப்படை கலைக்கப்பட்டது. அந்தத் தரைப்படையில் எஞ்சி இருந்த இந்தியப் போர் வீரர்கள் மற்ற இந்தியப் படைகளுக்கு மாற்றப்பட்டனர். மலாயா போர்கள் முடிவடையும் போது அந்த இரு படைப்பிரிவுகளின் போர்வீரர்கள் பலர் காட்டில் இருந்தனர்.[5][6]

22 நாட்கள் நடந்த மூவார் போரில் ஆஸ்திரேலிய இராணுவத்தின் 2/19-ஆவது பட்டாளம்; இரண்டாம் உலகப் போரில் மற்ற ஆஸ்திரேலியத் தரைபடைகளைக் காட்டிலும் அதிகமாகன உயிர் இழப்புகளைச் சந்தித்தது; 335 பேர் கொல்லப்பட்டனர்; மற்றும் 97 பேர் காயமடைந்தனர்.[7] சப்பானிய இராணுவத்திற்கு 700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Horner, David (1995). "The Gunners: A History of Australian Artillery". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942.
  2. 2.0 2.1 British Ministry of Information, C276771, The Australian War Memorial
  3. Wigmore 1957, p. 249.
  4. Morgan 2013, p. 7.
  5. "Extracts of Singapore Burning". Colin Smith. May 2006. http://www.colin-smith.info/pages/books/extracts/singapore_burning/extract_05.htm. 
  6. Wigmore 1957, p. 220.
  7. Taki. "History of Imperial Japanese Tanks". Taki. பார்க்கப்பட்ட நாள் 2009-05-11.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவார்_போர்&oldid=3937306" இலிருந்து மீள்விக்கப்பட்டது