மூவார் மாவட்டம்
மூவார் மாவட்டம் Muar District Daerah Muar | |
---|---|
ஜொகூர் மாநிலத்தில் மூவார் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°9′N 102°40′E / 2.150°N 102.667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
தொகுதி | பக்ரி மக்களவைத் தொகுதி |
உள்ளாட்சி | மூவார் நகராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | முசுதபா கமால் சம்சுதீன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,354 km2 (523 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,33,779 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 84xxx |
தொலைபேசி எண்கள் | +6-07 |
வாகனப் பதிவெண்கள் | J |
மூவார் மாவட்டம் (ஆங்கிலம்: Muar District; மலாய்: Daerah Muar; சீனம்: 麻坡县; ஜாவி: دايره موار) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்திற்கு மூவார் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
மூவார் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 150 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 143 கி.மீ.; மலாக்கா மாநகரில் இருந்து 47 கி.மீ.; சிங்கப்பூரில் இருந்து 179 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
மூவார் நகரம்
[தொகு]மலாக்கா நீரிணையின் கரையோரத்தில்; மூவார் ஆற்றின் முகப்பில் மூவார் நகரம் அமைந்து உள்ளது. மூவார் மாவட்டம், சிங்கப்பூரைப் போல இரண்டரை மடங்கு பெரிய நிலப்பகுதியைக் கொண்டது.
மூவார் மாவட்டம் முன்பு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. மூவார் அல்லது பண்டார் மகாராணி என்பது மற்றொரு பிரிவு. லேடாங் எனும் தங்காக் என்பது மற்றொரு பிரிவு. தங்காக் ஒரு துணை மாவட்டமாக நிலை உயர்த்தப் பட்டதும், மூவார் ஒரு தனி நகராண்மைக் கழகமானது. இரண்டும் இப்போது தனித்தனியாகச் செயல் படுகின்றன.
வரலாறு
[தொகு]ஜொகூர் மாநிலத்தின் அரச நகரம் இந்த மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது. பண்டார் மகாராணி மூவார் என்று அழைக்கப் படுகிறது. ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு மாநகரத்திற்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக மூவார் விளங்கி வருகிறது.
முன்பு இந்த நகரம் தங்காக் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு, மூவார் என்பது தனி நகரமாகவும், ஒரு தனி மாவட்டமாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.[1]
மலாக்கா சுல்தானகம்
[தொகு]மலேசிய மாவட்டங்களில் மூவார் மாவட்டம் மிகவும் பழைமை வாய்ந்த மாவட்டமாகக்க் கருதப் படுகிறது. இந்த மாவட்டத்தில் மலாக்கா தொடர்பான பல வரலாற்று பதிவுகளும், தொல்பொருள் பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
மலாக்கா சுல்தானகம் தொடங்குவதற்கு முன்பாகவே மூவாரின் வரலாறு தொடங்கி விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1361-இல், மஜாபாகித் இந்து பேரரசின் ஒரு பகுதியாக மூவார் இருந்து உள்ளது.
மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேசுவரா. இவர் சுமத்திரா, துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டதும், மலாக்காவிற்குச் சென்ற போது, இந்த மூவார் பகுதியில் கோத்தா பூரோக் எனும் இடத்தில் சில காலம் தங்கி இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.
சுல்தான் முகமுட் சா
[தொகு]1511-இல், மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும், மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் மகமுட் ஷா, இந்த மூவாரில் தான் தஞ்சம் அடைந்தார். மூவாரில் இருந்தவாறு சுல்தான் மகமுட் ஷா, போர்த்துகீசியர்களை எதிர்த்துப் போராடி வந்தார். [2]
மலாக்காவை ஆட்சி செய்த ஏழாவது அரசர், சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா வின் (1477–1488) கல்லறையும் சேதம் அடைந்த நிலையில் இன்னும் மூவாரில் தான் இருக்கிறது. அந்தக் கல்லறையை போர்த்துகீசியர்கள் சிதைத்து விட்டனர். மலேசிய வரலாற்றுப் பதிவுகளில் மூவார் எனும் நகரம் பல இடங்களில் காணப்படுகிறது.
மூவார் போர்
[தொகு]மூவாரை போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்த போது, டச்சுக்காரர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போர்த்தலேசா டி மூவார் எனும் கோட்டையை இங்கு கட்டினார்கள். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் இங்கு ஒரு பெரிய போர் நடந்தது. அதை மூவார் போர் என்று அழைக்கிறார்கள்.[3]
1942 சனவரி 14-இல் இருந்து சனவரி 22 வரை, மூவாருக்கு அருகாமையில் இருந்த கெமிஞ்சே, மூவார் ஆறு, பக்கிரி மலை போன்ற இடங்களில் பலமான சண்டை நடைபெற்றன. மலாயா மீது ஜப்பானியர்கள் தொடுத்த தாக்குதல்களில் இதுவே ஆகக் கடைசியான போர். இந்தப் போரில், பிரித்தானியர்களுக்கு உதவியாக இருந்த 45-வது இந்தியக் காலாட்படை ஒட்டு மொத்தமாக அழிக்கப் பட்டது.
நிர்வாகப் பகுதிகள்
[தொகு]மூவார் மாவட்டத்தில் முக்கிம்கள்
[தொகு]மூவார் மாவட்டத்தில் 12 முக்கிம்கள் உள்ளன.[4]
- ஆயர் ஈத்தாம் (Ayer Hitam)
- புக்கிட் கெப்போங் (Bukit Kepong)
- பக்ரி சாலை (Jalan Bakri)
- ஜோராக் (Jorak)
- லெங்கா (Lenga)
- மூவார் (Muar Town)
- பாரிட் பாக்கார் (Parit Bakar)
- பாரிட் ஜாவா (Parit Jawa)
- ஸ்ரீ மெனாந்தி (Seri Menanti)
- சுங்கை பாலாங் (Sungai Balang)
- சுங்கை ராயா (Sungai Raya)
- சுங்கை தெராப் (Sungai Terap)
நகரங்கள்
[தொகு]- மூவார் (Muar Town)
- பாகோ (Pagoh)
- பாரிட் ஜாவா (Parit Jawa)
- சுங்கை பாலாங் (Sungai Balang)
- புக்கிட் கெப்போங் (Bukit Kepong)
- புக்கிட் பாசிர் (Bukit Pasir)
- பஞ்சூர் (Panchor)
- லெங்கா (Lenga)
- ஜாலான் பக்ரி (Jalan Bakri)
- புக்கிட் நானிங் (Bukit Naning)
தேர்தல் முடிவுகள்
[தொகு]மலேசிய மக்களவை
[தொகு]மலேசிய மக்களவையில் மூவார் மாவட்டத்தின் தொகுதிகள்.
# | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P143 | பாகோ மக்களவைத் தொகுதி | முகைதீன் யாசின் | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
P145 | பக்ரி மக்களவைத் தொகுதி | இயோ பி இன் | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
P146 | மூவார் மக்களவைத் தொகுதி | சையட் சாதீக் | சுயேட்சை |
ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்
[தொகு]ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் மூவார் மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[5]
மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
N7 | புக்கிட் கெப்போங் | சாருடின் ஜமால் | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
N8 | புக்கிட் பாசிர் | நஜீப் லெப் | பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) |
N12 | பெந்தாயான் | நிங் யாக் கோ | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
N13 | சிம்பாங் ஜெராம் | சலாவுடின் அயூப் | பெரிக்காத்தான் நேசனல் (அமானா) |
N14 | புக்கிட் நானிங் | யாசுருடின் குசினி | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
N15 | மகாராணி | நோர் அயாத்தி பாச்சோக் | பெரிக்காத்தான் நேசனல் (அமானா) |
N16 | சுங்கை பாலாங் | சைத்தோன் இசுமாயில் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
மூவார் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]மலேசியா; ஜொகூர்; மூவார் மாவட்டத்தில் (Muar District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 346 மாணவர்கள் பயில்கிறார்கள். 64 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD5080 | மூவார் | SJK(T) Jalan Khalidi[7][8] | ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளி | 84000 | மூவார் | 118 | 19 |
JBD5084 | பஞ்சூர் | SJK(T) Ladang Lanadron[9] | லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி | 84500 | பஞ்சூர் | 152 | 27 |
JBD5087 | பன் ஹெங் தோட்டம் | SJK(T) Ladang Ban Heng[10] | பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 84600 | பாகோ | 7 | 8 |
JBD5088 | திமியாங் ரெஞ்சோங் தோட்டம் | SJK(T) Ladang Temiang Renchong[11] | திமியாங் ரெஞ்சோங் தமிழ்ப்பள்ளி | 84300 | மூவார் | 69 | 10 |
காட்சியகம்
[தொகு]ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
[தொகு]- பத்து பகாட் மாவட்டம்
- ஜொகூர் பாரு மாவட்டம்
- குளுவாங் மாவட்டம்
- கோத்தா திங்கி மாவட்டம்
- கூலாய் மாவட்டம்
- மெர்சிங் மாவட்டம்
- மூவார் மாவட்டம்
- பொந்தியான் மாவட்டம்
- சிகாமட் மாவட்டம்
- தங்காக் மாவட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Muar to say goodbye to Tangkak". Archived from the original on 2012-09-01. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "Parameswara, Malacca empire founder, have set up a settlement in Pagoh, Ulu Muar after fleeing from Temasik before heading to Malacca". Archived from the original on 2014-06-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-10.
- ↑ The Battle of Muar was the last major battle of the Malayan campaign. It took place from 14 January to 22 January 1942 around Gemensah Bridge and on the Muar River.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original (PDF) on 2019-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "PILIHAN RAYA PARLIMEN BAGI NEGERI JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 July 2024.
- ↑ "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
- ↑ "ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளி - PANCARAGAM SJKT JALAN KHALIDI" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
- ↑ "Vanesri Kasi has won several prizes, including a Best Innovation Award at national level as well as a Sports Education Award in Thailand". Varkey Foundation (in ஆங்கிலம்). Archived from the original on 26 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
- ↑ "ஜொகூர் மாநிலத்தின் முதல் தமிழ்ப் பள்ளி லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி". AKTIVITI SJK TAMIL LANADRON 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
- ↑ "பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SRJK (T) Ladang Ban Heng Ditubuhkan pada tahun 1947". www.sjktladangbanheng.yolasite.com.
- ↑ "திமியாங் ரெஞ்சோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". ladangtemiangrenchong.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]