தஞ்சோங் பெலப்பாஸ்

ஆள்கூறுகள்: 1°21′59″N 103°32′54″E / 1.366347°N 103.548367°E / 1.366347; 103.548367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சோங் பெலப்பாஸ்
Port of Tanjung Pelepas
தஞ்சோங் பெலப்பாஸ் is located in மலேசியா
தஞ்சோங் பெலப்பாஸ்
தஞ்சோங் பெலப்பாஸ்
மலேசியாவில் அமைவிடம்
அமைவிடம்
நாடு  மலேசியா
இடம் ஜொகூர், மலேசியா
ஆள்கூற்றுகள் 1°21′59″N 103°32′54″E / 1.366347°N 103.548367°E / 1.366347; 103.548367
விவரங்கள்
திறப்பு 13 மார்ச் 2000
துறைமுகம் வகை துறைமுகம்
நிறுத்தற் தளங்கள் 14
ஊழியர்கள் 11,000
தலைவர் டான் ஸ்ரீ காலிப் முகம்ட் நோ
உரிமையாளர் ஜொகூர் நிறுவகம்
(Johor Corporation)
நிர்வாகம் தஞ்சோங் பெலப்பாஸ் நிறுவனம்
அமைவிடம் இசுகந்தர் புத்திரி, ஜொகூர் பாரு மாவட்டம்,
புள்ளிவிவரங்கள்
ஆண்டு சரக்கு டன்கள் 12.5 மில்லியன் TEU
ஆண்டுக்கான சரக்குப் பெட்டக கொள்ளளவு 6.2 மில்லியன் டன்கள்
இணையத்தளம் www.ptp.com.my

தஞ்சோங் பெலப்பாஸ் (UN/Locode: MYTPP) (மலாய்: Pelabuhan Tanjung Pelepas; ஆங்கிலம்: Port of Tanjung Pelepas); (சுருக்கம்: PTP) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொள்கலன் (Container Port) துறைமுகம் ஆகும். ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது துறைமுகம்.

குளோபல் தெர்மினல் நெட்வொர்க் (Global Terminal Network) எனும் உலகளாவிய கொள்கலன் முனைய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்தத் துறைமுகத்தின் முனையங்கள் உள்ளன. இருப்பினும் எம்.எம்.சி. (MMC Corporation Berhad) என்று அழைக்கப்படும் கொள்கலன் முனைய நிறுவனம், இந்தத் துறைமுக முதலீட்டில் 70 விழுக்காடு கொண்டுள்ளது.[1]

பொது[தொகு]

தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் உள்ள சில முனையங்களை ஏபிஎம் தெர்மினல் (APM Terminals) என்று அழைக்கிறார்கள். ஏபி மோலர் மார்சுக் (A.P. Moller-Maersk) எனும் டச்சு நாட்டு நிறுவனம் 30 விழுக்காடு முதலீடு செய்துள்ளது.

இந்தத் துறைமுகம் மலேசியாவின் தென்மேற்கு ஜொகூரில் உள்ள பூலாய் ஆற்றின் கிழக்கு முகப்பில் ஜொகூர் நீரிணைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. ஜொகூர் நீரிணை என்பது மலேசியாவையும் சிங்கப்பூசிங்கப்பூரையும் பிரிக்கும் நீர்ப்பகுதி ஆகும். சிங்கப்பூர் துறைமுகங்களுடன் போட்டியிடும் முயற்சியில் இந்தத் துறைமுகம் கட்டப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சோங்_பெலப்பாஸ்&oldid=3584954" இருந்து மீள்விக்கப்பட்டது