பெக்கோக்
பெக்கோக் | |
---|---|
Bekok | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 2°18′N 103°08′E / 2.300°N 103.133°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | சிகாமட் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 785 km2 (303 sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 86500[1] |
தொலைபேசி எண்கள் | 06-07-944 xxxx |
போக்குவரத்து பதிவெண்கள் | J |
பெக்கோக் (மலாய்: Bekok; ஆங்கிலம்: Bekok; சீனம்: 彼咯) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம் ஆகும். இந்த நகரம் சிகாமட் நகரத்திற்கு தென் கிழக்கே 54 கிமீ தொலைவில் உள்ளது. 785 சதுர கிமீ 2 பரப்பளவு கொண்ட பெக்கோ, சிகாமட் மாவட்டத்தில் மிகப்பெரிய முக்கிம் ஆகும்.
இயற்கை ஆர்வலர்களால் நன்கு அறியப்பட்ட இந்த நகரம், எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவின் மேற்கு நுழைவாயிலாகவும் உள்ளது. சுங்கை பந்தாங் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் ஒரு நீர்வீழ்ச்சியும் இங்கு உள்ளது.[2]
கம்போங் குடோங் மற்றும் கம்போங் கெமிடாக் போன்ற பல மலேசியப் பழங்குடியினர் குடியிருப்புகளையும் பெக்கோக் கொண்டுள்ளது. மலாயா சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், இந்த நகரம் பிரித்தானிய மலாயா அரசாங்கத்திற்கு எதிரான கம்யூனிச செயல்பாடுகளின் "கருப்பு பகுதி" எனவும் அறியப்படுகிறது.
பொது
[தொகு]இந்த நகரத்தின் பெயர் முதலில் ]]சீன மொழி]]யின் ஒரு பிரிவான ஆக்கா பேச்சு வழக்கின் சொல்லான "முகோக்" என்பதிலிருந்து வந்திருக்கலாம் எனவும் அறியப்படுகிறது. முகோக் என்பது "மூலை" என்று பொருள்படும்.
இந்த நகரம் கூட்டரசு சாலை 1 (மலேசியா)-இன் சந்திப்பில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கூட்டரசு சாலை 1 (மலேசியா)-இன் சந்திப்பில் இருந்து இந்த நகரத்தைப் பின்னர் தொடருந்துகள் வழியாக அணுகலாம்.
மக்கள்தொகையியல்
[தொகு]2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மலேசிய புள்ளியியல் துறை வழங்கியுள்ள புள்ளிவிவரங்கள்:[3]
பெக்கோக் இனக்குழுக்கள், 2010 | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
பூமிபுத்திரா, மலாயர் | 320 | 19.23% |
சீனர் | 1,151 | 69.17% |
இந்தியர் | 115 | 6.91% |
மற்ற பூமிபுத்ரா | 9 | 0.54% |
மற்றவர்கள் | 7 | 0.42% |
மலேசியர் அல்லாதவர் | 62 | 3.73% |
கல்வி
[தொகு]தொடக்கக் பள்ளிகள்
[தொகு]- செரி பெக்கோக் தேசியப் பள்ளி - Sekolah Kebangsaan Seri Bekok
- கம்போங் கூடுங் தேசியப் பள்ளி - Sekolah Kebangsaan Kampong Kudung
- பெக்கோக் தமிழ்ப் பள்ளி - Sekolah Jenis Kebangsaan (Tamil) Bekok
- பெக்கோக் சீனப் பள்ளி - Sekolah Jenis Kebangsaan (Cina) Bekok
உயர்நிலை பள்ளி
[தொகு]- பெக்கோ உயர்நிலைப் பள்ளி - Sekolah Menengah Kebangsaan Bekok
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bekok, Johor Postcode List - Page 1 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 30 March 2024.
- ↑ "Air Terjun Sg. Bantang, Bekok". Portal Rasmi Majlis Daerah Labis. 22 February 2016. பார்க்கப்பட்ட நாள் 30 March 2024.
- ↑ "Population Distribution by Local Authority Areas and Mukims, 2010" (PDF). Department of Statistics Malaysia. Archived from the original (PDF) on 27 February 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]