கங்கார் தெப்ராவ்

ஆள்கூறுகள்: 1°31′45.7″N 103°45′33.7″E / 1.529361°N 103.759361°E / 1.529361; 103.759361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கார் தெப்ராவ்
Kangkar Tebrau
ஜொகூர்
உலு தெப்ராவ் சாலை
உலு தெப்ராவ் சாலை
கங்கார் தெப்ராவ் is located in மலேசியா
கங்கார் தெப்ராவ்
      கங்கார் தெப்ராவ்
ஆள்கூறுகள்: 1°31′45.7″N 103°45′33.7″E / 1.529361°N 103.759361°E / 1.529361; 103.759361
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் ஜொகூர் பாரு
அரசு
 • வகைஜொகூர் பாரு மாநகராட்சி
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு81100
தொலைபேசி குறியீடு+6-07
போக்குவரத்துப் பதிவெண்கள்J

கங்கார் தெப்ராவ், (மலாய்: Kangkar Tebrau; ஆங்கிலம்: Kangkar Tebrau; சீனம்: 康卡地不佬); என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், தெப்ராவ் நகரில் அமைந்து உள்ள ஒரு கிராமப் புறநகர்ப்பகுதி ஆகும். இந்தக் கிராமப்புற நகரம் ஜொகூர் பாரு மாநகரத்தில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

ஜொகூர் வரலாற்றில் தெப்ராவ் எனும் பெயர் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ஜொகூர் நீரிணை என்று அழைக்கப் படுவது முன்னர் காலத்தில் தெப்ராவ் நீரிணை என்று அழைக்கப்பட்டது.[2][3]

வரலாறு[தொகு]

1800-களின் முற்பகுதியில் ராஜா தெமாங்கோங் டாயாங் இப்ராகிம் (Raja Temenggong Tun Daeng Ibrahim) ஜொகூரை ஆட்சி செய்தபோது, தன் வருமானத்தை கடல் சார்ந்த வணிகத்தில் இருந்து நிலம் சார்ந்த வணிகமாக மாற்ற வேண்டி இருந்தது. சீன வணிகர்கள் மற்றும் புலம்பெயர்ந்த சீனத் தொழிலாளர்களின் உதவியுடன் அந்த மாற்றத்தைச் செய்தார்.[4]

அந்த நேரத்தில், ஜொகூரில் சில கிராமங்கள் இருந்தன. அந்தக் கிராமங்கள் கடற்கரையோரம் அல்லது முக்கிய ஆறுகள் இருந்த இடங்களில் இருந்தன. அந்த ஆறுகளைப் பயன்படுத்திய சீன வணிகர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை தெமாங்கோங் டாயாங் இப்ராகிம் வழங்கினார். அந்தப் பத்திரங்களுக்கு ’சூராட் சுங்கை’ (Surat Sungai) என்று பெயர்.[4]

மூலிகை மிளகுத் தோட்டங்கள்[தொகு]

அந்த அனுமதிப் பத்திரங்கள்; ஒரு நதி அல்லது துணை நதியின் கரைப் பகுதியில் உள்ள நிலங்களைத் திறக்க அனுமதிக்கும் தற்காலிக மானியங்கள் ஆகும். அனுமதிப் பத்திரங்களை வைத்து இருந்த ஒரு சீன வணிகர் "கஞ்சு" (Kangchu) என்று அறியப்பட்டார்.

தொடக்கக்கால விவசாய நடவடிக்கைகள் மூலிகை மற்றும் மிளகுத் தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இருந்தன. முதல் அனுமதிப் பத்திரம் 1844-இல் டான் கீ சூன் (Tan Kee Soon) என்பவருக்கு தெப்ராவ் ஆற்றைச் (Sungai Tebrau) சுற்றி இருந்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பகுதிதான் பின்னர் கங்கார் தெப்ராவ் (Kangkar Tebrau) என்று பெயர் பெற்றது.[4]

குடியிருப்பு பகுதிகள்[தொகு]

  • பண்டார் டத்தோ ஓன் (Bandar Dato' Onn)
  • அடா அடுக்குமாடி குடியிருப்பு (Adda Heights)
  • தாமான் டெலிமா (Taman Delima)
  • தாமான் டாயா (Taman Daya)
  • தாமான் செத்தியா இண்டா (Taman Setia Indah)
  • தாமான் மவுண்ட் ஆஸ்டின் (Taman Mount Austin)
  • தாமான் டேசா தெப்ராவ் (Taman Desa Tebrau)
  • தாமான் டேசா ஜெயா (Taman Desa Jaya)
  • தாமான் டேசா செமர்லாங் (Taman Desa Cemerlang)
  • தாமான் ஏசான் ஜெயா (Taman Ehsan Jaya)
  • தாமான் இஸ்திமேவா (Taman Istimewa)
  • தாமான் புக்கிட் முத்தியாரா (Taman Bukit Mutiara)
  • தாமான் டேசா முத்தியாரா (Taman Desa Mutiara)
  • தாமான் ஸ்ரீ ஆஸ்டின் (Taman Seri Austin)
  • தாமான் எக்கோ புளோரா (Taman Ekoflora)

கிராமப் புறங்கள்[தொகு]

  • கம்போங் கங்கார் தெப்ராவ் (Kampung Kangkar Tebrau)
  • கம்போங் பாண்டான் (Kampung Pandan)
  • உலு திராம் (Ulu Tiram)
  • கெம்பாஸ் பாரு (Kempas Baru)
  • தம்போய் (Tampoi)

தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி[தொகு]

ஜொகூர் பாரு மாவட்டம் (Johor Baru District) தெப்ராவ் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 386 மாணவர்கள் பயில்கிறார்கள். 30 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
தாமான் அடா
Taman Adda Heights
SJK(T) Ladang Tebrau[6] தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் பாரு 386 30

மேற்கோள்கள்[தொகு]

  1. "LAWATAN BERSEPADU KE SUNGAI TEBRAU". Official Portal of Johor Bahru City Council (MBJB). Archived from the original on 2 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Strait of Johor - Infopedia". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.
  3. "Balai Raya Kampung Kangkar Tebrau - Johor Bahru 🇲🇾 - WorldPlaces". malaysia.worldplaces.me (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 December 2022.
  4. 4.0 4.1 4.2 "When Temenggong Daeng Ibrahim ruled Johor in the early 1800's, he needed to change his source of income from a sea-based business (piracy?) to a land-based business". helengray.net. பார்க்கப்பட்ட நாள் 25 December 2022.
  5. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  6. SHAH, REMAR NORDIN and MOHD FARHAAN. "தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கார்_தெப்ராவ்&oldid=3928441" இலிருந்து மீள்விக்கப்பட்டது