பாரிட் சூலோங்

ஆள்கூறுகள்: 1°58′54″N 102°52′42″E / 1.98167°N 102.87833°E / 1.98167; 102.87833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிட் சூலோங்
Parit Sulong
ڤاريت سولوڠ
 ஜொகூர்
மூவார் - யோங் பெங் சாலையில் பாரிட் சூலோங் சிறுநகரம்
மூவார் - யோங் பெங் சாலையில்
பாரிட் சூலோங் சிறுநகரம்
Map
ஆள்கூறுகள்: 1°58′54″N 102°52′42″E / 1.98167°N 102.87833°E / 1.98167; 102.87833
நாடு Malaysia
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்பத்து பகாட் மாவட்டம்
அரசு
 • வகைமலேசிய உள்ளாட்சி மன்றங்கள்
 • நிர்வாகம்பத்து பகாட் நகராட்சி
(Batu Pahat Municipal Council)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு84xxx
தொலைபேசி எண்+6-07
போக்குவரத்துப் பதிவெண்J

பாரிட் சூலோங் (மலாய்: Parit Sulong; ஆங்கிலம்: Parit Sulong; சீனம்: 巴力苏隆); என்பது மலேசியா, ஜொகூர், பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். மூவாருக்கு கிழக்கே 30 கிமீ (19 மைல்) தொலைவில் உள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது, இங்கு கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பாரிட் சூலோங் பாலம்; அந்த நகரத்தின் முக்கிய அம்சமாகும். பத்து பகாட் மாவட்டத்தின் தலைநகரான பத்து பகாட் நகரிலிருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவில் பாரிட் சூலோங் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

1942 சனவரி 22-ஆம் தேதி, 45-ஆவது இந்தியப் படை; 8-ஆவது ஆஸ்திரேலிய தரைப்படையைச் சேர்ந்த 150 போர்க் கைதிகள் சப்பானிய இராணுவத்தின் 25-ஆவது படைப்பிரிவினரால் இங்கு கொல்லப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வாக அறியப்படுகிறது. அந்த வரலாற்று நிகழ்வு பாரிட் சூலோங் படுகொலை என்று அழைக்கப்படுகிறது.[1]

ஏறக்குறைய 150 ஆஸ்திரேலிய மற்றும் இந்திய வீரர்கள்; சப்பானிய இராணுவத்தின் போர்க் கைதிகள் ஆனார்கள். போர்க் கைதிகளான அவர்கள் அடித்துத் துன்புறுத்தப் பட்டனர்; மற்றும் நகர முடியாத போர்க் கைதிகள் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த வீரர்கள் அருகிலுள்ள கட்டிடத்திற்குள் அடைக்கப்பட்டனர்.[2]

அங்கு அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு நெரிசலான அறைகளில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவக் கவனிப்பு மற்றும் குடிப்பதற்குத் தண்ணீர் மறுக்கப்பட்டன. இந்த நேரத்தில், அரச சப்பானிய வீரர்கள், இந்திய வீரர்கள் சிலரின் தலைகளைத் துண்டித்தனர். மற்றும் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3]

தக்குமா நிசிமுரா[தொகு]

சிறிது நேரத்திற்குப் பிறகு, எஞ்சியிருந்த வீரர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியே தள்ளப்பட்டனர. அங்கு அவர்கள் துப்பாக்கிக் கட்டைகளால் அடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் சமுராய் கத்திகளால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். மேலும் பலர் சாலையின் நடுவில் கம்பியால் கட்டப்பட்டு இயந்திரத் துப்பாக்கியால் சுடப்பட்டனர். உயிருடன் இருந்த மற்ற போர்க் கைதிகள் சிலரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்கப்பட்டது. இந்தப் படுகொலையில் 150 போர்க் கைதிகள் உயிரிழந்தனர்.[4]

படுகொலைக்கு உத்தரவிட்ட சப்பானிய அதிகாரி, தக்குமா நிசிமுரா, போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக மெய்ப்பிக்கப்பட்டு, 1951 சூன் 11 அன்று தூக்கிலிடப்பட்டார்.[5]

மூவார் போர்; பாரிட் சூலோங் படுகொலை ஆகியவற்றை நினைவுகூரும் பாரிட் சூலோங் நினைவுச்சின்னம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Warren, Alan (2002). Britain's Greatest Defeat: Singapore, 1942. United Kingdom: Hambledon Continuum. பக். 172–175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1852855975. 
  2. Smith, Colin (2005). Singapore Burning: Heroism and Surrender in World War II. United Kingdom: Penguin Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780141906621. 
  3. Tony Stephens, "The killing field at The Bridge" (Sydney Morning Herald, 13 September 2004). Access date: 16 February 2007.
  4. Ian Ward, Snaring the Other Tiger (Media Masters Publishers, Singapore, 1996); Dictionary of New Zealand Biography, "Godwin, James Gowing 1923 - 1995". Access date: 16 February 2007
  5. Hadley, Gregory.; Oglethorpe, James. (April 2007). "MacKay's Betrayal: Solving the Mystery of the "Sado Island Prisoner-of-War Massacre"". The Journal of Military History 71 (2): 441–464. doi:10.1353/jmh.2007.0118. https://archive.org/details/sim_journal-of-military-history_2007-04_71_2/page/441. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் Parit Sulong தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
  • Bedi, Harchand Singh (2015). "The Game of Love: Battle of Malaya". sikhnet.com.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிட்_சூலோங்&oldid=3939027" இலிருந்து மீள்விக்கப்பட்டது