மேதினி இசுகந்தர்

ஆள்கூறுகள்: 1°24′49″N 103°37′37″E / 1.41361°N 103.62694°E / 1.41361; 103.62694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதினி இசுகந்தர்
Medini Iskandar
மேதினி இசுகந்தர் புறநகர்ப் பகுதி
மேதினி இசுகந்தர் புறநகர்ப் பகுதி
மேதினி இசுகந்தர் is located in மலேசியா
மேதினி இசுகந்தர்
மேதினி இசுகந்தர்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 1°24′49″N 103°37′37″E / 1.41361°N 103.62694°E / 1.41361; 103.62694
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் ஜொகூர் பாரு
அமைவிடம்இசுகந்தர் புத்திரி
உருவாக்கம்2007
நேர வலயம்மலேசிய நேரம்
நிலைப்பாடுகட்டுமானத்தில் உள்ளது
உருவாக்குபவர்மேதினி இசுகந்தர் மலேசியா நிறுவனம்
(Medini Iskandar Malaysia Sdn Bhd)
கட்டுமானத்தின் முடிவு2030
Map
இசுகந்தர் புத்திரியில் மேதினி இசுகந்தர் அமைவிடம்

மேதினி இசுகந்தர் அல்லது மேதினி இசுகந்தர் மலேசியா (ஆங்கிலம்: Medini Iskandar அல்லது Medini Iskandar Malaysia; மலாய்: Medini Iskandar; சீனம்: 美迪尼依斯干达) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் மிகப் பெரிய நகர்ப்புறம் ஆகும்.

மேதினி எனும் பெயர் தீபகற்ப மலேசியாவின் தெற்கு முனையான உஜோங் மேதினி (Ujong Medini) எனும் பண்டைய பெயரில் இருந்து வந்தது. அந்தப் பெயரிலேயே இந்தப் புதிய நகர்ப்புறத் திட்டமும் உருவாகி வருகிறது. [1]

பொது[தொகு]

மேதினியின் வளர்ச்சிக்குப் முதுகெலும்பாய் உள்ள நிறுவனம் மேதினி இசுகந்தர் மலேசியா (Medini Iskandar Malaysia Sdn Bhd MIM) எனும் நிறுவனமாகும். மேதினி இசுகந்தர் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மேதினி இசுகந்தர் மலேசியா பொறுப்பாக உள்ளது.[2]

  • முதன்மைத் திட்டமிடல்
  • உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
  • கட்டிட மேம்பாட்டுத் திட்டம்
  • நகர மேலாண்மை
  • சேவை வழங்குதல்

மேதினி மாநகரம் (Medini City) எனும் ஒரு புதிய மாநகரத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு இந்த நகர்ப்புறம் உருவாக்கப்பட்டு வருகிறது.[1]

சிறப்புப் பொருளாதார மண்டலம்[தொகு]

இசுகந்தர் மலேசியாயாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் முதன்மைப் பகுதியாக விளங்குகிறது. 2,230 ஏக்கர் (9.3 சதுர கி.மீ.) பரப்பளவை உள்ளடக்கிய மேதினி இசுகந்தர், தற்போது மலேசியாயாவின் மிகப் பெரிய நகர்ப்புற வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.[3]

இதன் மொத்த மக்கள்தொகை 2030-ஆம் ஆண்டில் 450,000-ஆக இருக்கும் என்றும்; இதன் திட்ட வளர்ச்சியின் மதிப்பு $ 20 பில்லியன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The southern tip of Peninsular Malaysia was known as "Ujong Medini" to the locals, hence the name "Medini" has been adopted in current times as an homage to its history, and is poised to be the most dynamic zone in Iskandar Puteri". பார்க்கப்பட்ட நாள் 30 August 2022.
  2. "A Twin, and Rival, to Singapore Rises in Malaysia". NY Times. https://www.nytimes.com/2010/06/30/business/global/30rdbseamal.html?_r=0%203. 
  3. "Township Management, UEM Sunrise Edgenta form JV company". NST. http://www.nst.com.my/news/2016/01/121943/township-management-uem-sunrise-edgenta-form-jv-company. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேதினி_இசுகந்தர்&oldid=3506465" இலிருந்து மீள்விக்கப்பட்டது