பாக்கார் பத்து

ஆள்கூறுகள்: 1°30′1″N 103°46′45″E / 1.50028°N 103.77917°E / 1.50028; 103.77917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கார் பத்து
Bakar Batu
நகரம்
பாக்கார் பத்து is located in மலேசியா
பாக்கார் பத்து
      பாக்கார் பத்து
ஆள்கூறுகள்: 1°30′1″N 103°46′45″E / 1.50028°N 103.77917°E / 1.50028; 103.77917
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் ஜொகூர் பாரு
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய தொலைபேசி எண்கள்+6-07
மலேசிய பதிவெண்கள்J

பாக்கார் பத்து (ஆங்கிலம்: Bakar Batu; மலாய்: Kampung Bakar Batu, Tebrau; சீனம்: 峇卡峇都; ஜாவி: باكار باتو) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு கிராமப் பகுதியாகும்.[1]

இந்தப் பாக்கார் பத்து கிராமம், ஜொகூர் மாநிலத்தில் பழம்பெரும் வரலாற்றைக் கொண்டது. கம்போங் மலாயு மஜீடி (Kampung Melayu Majidee); தாமான் செந்தோசா; பெர்மாஸ் ஜெயா (Permas Jaya); ஆகிய புறநகர்க் குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையில் அமைந்து உள்ளது.

வரலாறு[தொகு]

பாக்கார் பத்து கிராமத்தில் முதலில் மலாய்க்காரர்களும் ஜாவானியர்களும் குடியேறினார்கள். 19 - 20-ஆம் நூற்றாண்டுகளில் அப்போதைய சுல்தான் இப்ராகிம் (Sultan Ibrahim Sir Abu Bakar) அவர்களுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்தனர்.

மலாய்க்காரர்களும் ஜாவானியர்களும் ரப்பர் தோட்டங்களில் பல வருடங்கள் பணிபுரிந்தனர். அதன் பிறகு, புறநகர்ப் பகுதியில் அவர்கள் தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடித்தனர். அந்த இடம் அப்போது தெப்ராவ் பக்கார் பத்து என்று அழைக்கப்பட்டது. 1915-ஆம் ஆண்டில் குடியேறியவர்களுக்கு நில உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அந்தப் பாக்கார் பத்து கிராமம், இப்போது பாசிர் பெலாங்கி, தாமான் இஸ்கந்தர், தாமான் செந்தோசா, பெர்மாஸ் ஜெயா போன்ற பல வீட்டு மனை குடியிருப்புகளால் சூழப்பட்டு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Malaysia Travel Atlas: includes Singapore & Brunei. Tuttle Publishing. 2013. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-14-629-0949-0. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கார்_பத்து&oldid=3624725" இலிருந்து மீள்விக்கப்பட்டது