இசுகந்தர் மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்கந்தர் மலேசியா
வளர்ச்சி மண்டலம்
Growth Corridor Metropolitan
Iskandar Malaysia
Wilayah Pembangunan Iskandar
இசுகந்தர் புத்திரி ஜொகூர் பாரு மாவட்டம்
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டங்கள்ஜொகூர் பாரு மாவட்டம்
கூலாய் மாவட்டம்
பொந்தியான் மாவட்டம்
கோத்தா திங்கி மாவட்டம்
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்2.23 மில்லியன்
 • Estimate (2025)3 மில்லியன்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாட்டில் இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு79xxx-82xxx, 86xxx
இணையதளம்iskandarmalaysia.com.my

இசுகந்தர் மலேசியா அல்லது இசுகந்தர் வளர்ச்சி மண்டலம் (மலாய்: Wilayah Pembangunan Iskandar; ஆங்கிலம்: Iskandar Malaysia அல்லது Iskandar Development Region (IDR); சீனம்: 馬來西亞依斯干達; ஜாவி: إسکندر مليسيا) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் அமைந்துள்ள வளர்ச்சி மண்டலம் ஆகும். தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (சுருக்கம்: SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[1]

2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பொது[தொகு]

இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் ஜொகூர் பாரு, தெற்கு பொந்தியான், கூலாய், பாசீர் கூடாங் மற்றும் ஜொகூர் நிர்வாக மையம் அமைந்துள்ள இசுகந்தர் புத்திரி ஆகியவை அடங்கும்.[2][3]

நகராண்மைக் கழகம்[தொகு]

இசுகந்தர் மலேசியா அமைப்பிற்குள் அடங்கும் நகராண்மைக் கழகங்கள்:

உட்பட மேலும் ஐந்து உள்ளூராட்சிகளின் அதிகார வரம்பில் பரவல் பகுதி உள்ளது.

2019-ஆம் ஆண்டில், மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது, இஸ்கந்தர் மலேசியாவை குளுவாங் மாவட்டம் மற்றும் கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்தார்.[4]

உள்ளூராட்சிகள்[தொகு]

  • கோத்தா திங்கி மாவட்ட நகராண்மைக் கழகம் (Majlis Daerah Kota Tinggi);
  • குளுவாங் மாவட்ட நகராண்மைக் கழகம் (Majlis Daerah Kluang);
  • சிம்பாங் ரெங்கம் மாவட்ட நகராண்மைக் கழகம் (Majlis Daerah Simpang Renggam);

ஆகிய மாவட்ட உள்ளூராட்சிகள் இணைத்துக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் இசுகந்தர் மலேசியாவின் மொத்தப் பரப்பளவும் 4,749 சதுர கிலோமீட்டராக அதிகரித்தது.

இசுகந்தர் மலேசிய வளாக மேம்பாட்டு ஆணையம்[தொகு]

2025-ஆம் ஆண்டில் இந்த மண்டலத்தின் மக்கள் தொகை 3 மில்லியன் என எதிர்பார்க்கப் படுகிறது. அதே வேளையில் முதலீடுகள் ஏறக்குறைய ரிங்கிட் 383 பில்லியன்களை அடையலாம் என்றும் கணிக்கப்படுகிறது.[1]

இசுகந்தர் மலேசியாவின் மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தும், இசுகந்தர் வளாக மேம்பாட்டு ஆணையத்தால் 9Iskandar Regional Development Authority) திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப் படுகின்றன.

இசுகந்தர் மலேசியாவில் ஊக்குவிக்கப்படும் துறைகள்[தொகு]

  • மின்னியல் & மின்னணுவியல் - (Electrical & Electronics)
  • பெட்ரோலிய வேதியல் - (Petrochemical)
  • எண்ணெய் வேதியியல் - (Oleo-chemical)
  • உணவு வேளாண் தொழில்கள் - (Food & Agro-Processing)
  • இருப்பியக்கச் சேவைகள் - (Logistics)
  • சுற்றுலாத்துறை - (Tourism)
  • புத்தாக்கத் திறன் - (Creative)
  • நல்வாழ்வியல் - (Healthcare)
  • நிதிசார் துறைகள் - (Financial)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுகந்தர்_மலேசியா&oldid=3505367" இருந்து மீள்விக்கப்பட்டது