பாகோ

ஆள்கூறுகள்: 2°9′0″N 102°46′0″E / 2.15000°N 102.76667°E / 2.15000; 102.76667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகோ
புறநகர்
ஜொகூர்
Pagoh
பாகோ (2021).
பாகோ (2021).
பாகோ is located in மலேசியா
பாகோ
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°9′0″N 102°46′0″E / 2.15000°N 102.76667°E / 2.15000; 102.76667
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்மூவார்
அரசு
 • வகைமலேசிய உள்ளாட்சி மன்றங்கள்
 • நிர்வாகம்மூவார் நகராட்சி மன்றம்
(Muar Municipal Council)
நேர வலயம்மலேசிய நேரம்
மலேசிய அஞ்சல் குறியீடு84xxx
மலேசியத் தொலைபேசி எண்+6-07
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்J

பாகோ (மலாய்: Pagoh; ஆங்கிலம்: Pagoh; சீனம்:巴果); என்பது மலேசியா, ஜொகூர், மூவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். மூவார் நகரில் இருந்து 21 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து சுமார் 154 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள முக்கிய விரைவுச் சாலையான வடக்கு-தெற்கு விரைவுசாலையில் உள்ள முக்கியச் சாலைப் பரிமாற்றங்களில் வழியாகப் பாகோவிற்குச் செல்லலாம்.

இந்த நகரம் மூவார்-லாபிஸ் (J32) சாலை (Jalan Muar-Labis); பாகோ-பாரிட் சூலோங் (J23) சாலை (Jalan Pagoh-Parit Sulong); ஆகிய இரண்டு முக்கிய சாலைகளால் இணைக்கப்பட்டு உள்ளது.

அருகில் உள்ள நகரங்கள்[தொகு]

  1. மூவார் (Muar Town)
  2. பாரிட் ஜாவா (Parit Jawa)
  3. சுங்கை பாலாங் (Sungai Balang)
  4. புக்கிட் கெப்போங் (Bukit Kepong)
  5. புக்கிட் பாசிர் (Bukit Pasir)
  6. பஞ்சூர் (Panchor)
  7. லெங்கா (Lenga)
  8. ஜாலான் பக்ரி (Jalan Bakri)
  9. புக்கிட் நானிங் (Bukit Naning)

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) பாகோ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசியாவின் 8-ஆவது பிரதமர் முகிதீன் யாசின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
P143 பாகோ முகிதீன் யாசின் பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.)

காட்சியகம்[தொகு]

தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

ஜொகூர், மூவார் மாவட்டம், பாகோ நகருக்கு அருகில் இருக்கும் பஞ்சூர் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி. ஜொகூர் மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி எனும் பெருமையும் இந்தப் பள்ளிக்கு உண்டு. இந்தப் பள்ளியில் 152 மாணவர்கள் பயில்கிறார்கள். 27 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பாகோ நகரின் புறநகர்ப் பகுதியில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியில் 7 மாணவர்கள் பயில்கிறார்கள். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பன் ஹெங் தோட்டத்தில் பணிபுரிந்த தமிழர்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு மாறிச் செல்வதால், இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. தக்க நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என்றால் இந்தப் பள்ளியும் மூடப் படலாம்.

மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[2]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD5084 பஞ்சூர் SJK(T) Ladang Lanadron[3] லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி பஞ்சூர் 154 17
JBD5087 பன் ஹெங் தோட்டம் SJK(T) Ladang Ban Heng[4] பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி பாகோ 7 8

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகோ&oldid=3610517" இருந்து மீள்விக்கப்பட்டது