உள்ளடக்கத்துக்குச் செல்

மாச்சாப்

ஆள்கூறுகள்: 1°52′N 103°15′E / 1.867°N 103.250°E / 1.867; 103.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா மாநிலத்தில் மாச்சாப் பாரு எனும் பெயரில் ஒரு நகரம் உள்ளது.
மாச்சாப்
Machap
 ஜொகூர்
மாச்சாப் நகரம்
மாச்சாப் நகரம்
மாச்சாப் is located in மலேசியா
மாச்சாப்
ஆள்கூறுகள்: 1°52′N 103°15′E / 1.867°N 103.250°E / 1.867; 103.250
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் குளுவாங் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்118 km2 (46 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்5,317
 • அடர்த்தி45/km2 (120/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
86000[2]
போக்குவரத்து பதிவெண்கள்J

மாச்சாப் (மலாய்: Machap; ஆங்கிலம்: Machap; சீனம்: 马什) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில், குளுவாங் நகரத்திற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு நகரமாகும். மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தென்பகுதியில் பயணிப்பவர்களுக்கு இந்த நகரம் நன்கு அறிமுகமான நகரமாக விளங்குகிறது.

சிம்பாங் ரெங்கம் நகர மையத்திலிருந்து வடமேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. மச்சாப் என்பது பழைய கிராமத்தின் பெயர். புதிய கிராமம் கம்போங் பாரு மாச்சாப் என்று அழைக்கப்படுகிறது.

மலாக்காவில் மாச்சாப் எனும் பெயரில் ஒரு நகரம் இருந்தாலும் அதனை மாச்சாப் பாரு என்று அழைக்கிறார்கள். பொதுவாக மலாக்கா மாச்சாப் என்றும் ஜொகூர் மாச்சாப் என்றும் அழைப்பது வழக்கமாகிவிட்டது.

இந்த இடம் முக்கியமாக அதன் நீர்த்தேக்கமான மாச்சாப் நீர்த்தேக்கத்திற்காக அறியப்படுகிறது. மாச்சாப் நீர்த்தேக்கத்திற்கு அருகில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு பொழுதுபோக்கு பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.[3]

பொது

[தொகு]

இந்த நகரம் மண்பாண்டத் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது. இங்கு சில மண்பாண்டப் பாத்திரக் கடைகள் இருந்தாலும், ஆயர் ஈத்தாம் நகரத்தில் இருப்பதைப் போல் அதிக எண்ணிக்கையில் இல்லை.

மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வழியாகப் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த நகரம் ஓய்வு இடமாக அமைந்துள்ளது. ஜொகூர் பாருவில் உள்ள லார்க்கின் சென்ட்ரல் (Larkin Sentral) எனும் லார்க்கின் பேருந்து நிலையம் வழியாக இந்த நகரத்தை அணுகலாம்.[4]

இங்கு வாழும் மக்களில் முதன்மை இனத்தவர்களாக சீனர்கள் உள்ளனர். இரண்டாவது நிலையில் மலாய்க்காரர்கள்; மூன்றாவது நிலையில் இந்தியர்கள் உள்ளனர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dokumen Terbitan. Handbook
  2. "Kampung Seri Machap, Simpang Rengam - Postcode - 86200 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
  3. "Machap comprises the old village and the new village or Kampung Baru. The place is mainly known for its dam, Empangan Machap". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
  4. "Bus Routes in Johor Bahru". BusInterchange.net. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாச்சாப்&oldid=3924280" இலிருந்து மீள்விக்கப்பட்டது