பெர்லிங்
பெர்லிங் | |
---|---|
புறநகரம் | |
Perling | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°28′52.38″N 103°40′57.75″E / 1.4812167°N 103.6827083°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
மாநகரம் | இசுகந்தர் புத்திரி |
உருவாக்கம் | 1981 |
அரசு | |
• நகரண்மைக் கழகம் | இசுகந்தர் புத்திரி மாநகராட்சி |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 81200 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-07 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
இணையதளம் | www |
பெர்லிங் அல்லது தாமான் பெர்லிங் (மலாய்: Taman Perling; ஆங்கிலம்: Perling; சீனம்: 柏伶) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறம் ஆகும். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1][2]
இந்த நகர்ப்புறம் 1981-ஆம் ஆண்டில் உருவாகப்பட்டது. 10,000 மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. 992 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட இந்தக் குடியிருப்பு நகர்ப்புறத்தை பெலாங்கி நிறுவனம் (Pelangi Berhad) உருவாக்கியது.
பொது
[தொகு]பெர்லிங் நகர்ப்பகுதியின் முக்கிய அடையாளமாக பெர்லிங் மால் (Perling Mall) எனும் பெர்லிங் பேரங்காடி உள்ளது, இரண்டு தளங்களைக் கொண்ட பெர்லிங் பேரங்காடியில் ஏறக்குறைய 100 கடைகள் உள்ளன.[3]
பெர்லிங் குடியிருப்புப் பகுதியின் குன்றில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி கட்டடம் உள்ளது. பங்சாபுரி மிடாசு (Pangsapuri MIDAS) என்று அழைக்கப்படும் இந்த அடுக்குமாடி கட்டடம், பெர்லிங் நகர்ப்புறத்தின் சின்னமாக விளங்குகிறது.
மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் வழியாக; ஜொகூர் பாருவில் உள்ள லார்க்கின் சென்ட்ரல் (Larkin Sentral) பேருந்து நிலையத்தில் இருந்து இந்தப் புறநகர் பகுதிக்குச் செல்லலாம்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dewan Taman Perling". Portal Rasmi Majlis Bandaraya Iskandar Puteri. 7 June 2017. பார்க்கப்பட்ட நாள் 30 August 2022.
- ↑ "Profil Ahli Majlis". 1 January 2016.
- ↑ "Perling Mall - Located within Taman Perling, Perling Mall stands apart from others with its strong thematic yesteryear concept. The mall's interior is styled to a nostalgic 60's shophouse concept which is especially appealing to tourists". travelmalaysia.me. பார்க்கப்பட்ட நாள் 30 August 2022.
- ↑ "Causeway Link Bus Routes & Bus Schedules | Causeway Link".
வெளி இணைப்புகள்
[தொகு]