பிளந்தோங்
பிளந்தோங் Plentong | |
---|---|
ஆள்கூறுகள்: 1°32′0″N 103°49′0″E / 1.53333°N 103.81667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
பரப்பளவு | |
• மொத்தம் | 270 km2 (100 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 4,48,160 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 81750 |
இடக் குறியீடு | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
பிளந்தோங் (ஆங்கிலம்: Plentong; மலாய்: Plentong; சீனம்: 避兰东; ஜாவி: ڤلينتوڠ) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் ஆகும்.[1]
பெர்மாஸ் ஜெயா, பாசீர் கூடாங் போன்ற நகர்ப்புற பகுதிகளைப் பிளந்தோங் முக்கிம் உள்ளடக்கியது. ஜொகூர் மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட முக்கிம் நிலப் பகுதி. இந்த முக்கிம் 500,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டது.
மலேசியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதிகளில் ஒன்றாகவும் இந்தப் பிளந்தோங் முக்கிம் கருதப் படுகிறது.[2]
வரலாறு
[தொகு]முதன்முதலில் 1859-ஆம் ஆண்டில், தேய் சூ காங் (Tey Chu Kang) என்று அழைக்கப்படும் சீன மக்களின் குடியேற்றமாகத் தொடங்கியது. பின்னர் புதிய சீனக் கிராமமாக மாற்றம் கண்டது.
1949-ஆம் ஆண்டு மலாயாவில் அவசரக்கால நிலைமை. அப்போது கம்போங் பாரு பான் பூ; கம்போங் லஞ்சூ; லாடாங் சான்; ஆகிய இடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப் பட்டார்கள்.
தற்போது கம்போங் பாரு என்று அழைக்கப்படும் இடத்தில் அந்தப் பழைய குடியேற்றம் உருவாக்கப்பட்டது. அந்த இடம்தான் பிளந்தோங். இப்போது ஜொகூர் மாநிலத்திலேயே மிகவும் பரபரப்பான நகர்ப் பகுதியாக விளங்குகிறது.[3]
புவியியல்
[தொகு]
தொடக்கக்கால வடிகால் அமைப்பின் காரணமாகப் பிளந்தோங் குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி மோசமான வெள்ள நிலைமை. பெர்மாஸ் ஜெயா மற்றும் உலு திராம் ஆகியவற்றில் இருந்து பாயும் தண்ணீரின் சந்திப்பு இடமாக பிளந்தோங் ஆறு உள்ளது. அதனால் அடிக்கடி திடீர் வெள்ளங்கள் ஏற்படுகின்றன.[4]
அந்த வகையில் பிளந்தோங் ஆற்றின் நீரோட்டத்தைச் சீராக்கும் வகையில் பிளந்தோங் பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்தது. 2013-ஆம் ஆண்டில், 57.7 மில்லியன் ரிங்கிட் செலவில் வெள்ளத் தணிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Latar Belakang Plentong". Portal Rasmi Majlis Bandaraya Iskandar Puteri. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
- ↑ "Plentong is a mukim in Johor Bahru District, Johor, Malaysia". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
- ↑ Guinness, Patrick (1992). "On the margin of capitalism: people and development in Mukim Plentong, Johor, Malaysia". Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
- ↑ "Flash floods force 176 to evacuate in Johor". www.astroawani.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
- ↑ "Heavy rain and an exceptionally high tide caused flash floods in Kampung Plentong Baru". பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.