யோங் பெங்
Yong Peng | |
---|---|
![]() 2010-ஆம் ஆண்டில் யோங் பெங் | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°0′00″N 103°04′0″E / 2.00000°N 103.06667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
நகரத் தோற்றம் | 1900-களில் |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 29,046 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை (ஒசநே) |
அஞ்சல் குறியீடு | 83700 |
தொலைபேசி குறியீடு | +607 |
http://www.mdyongpeng.gov.my/en |
யோங் பெங், (மலாய்: Pekan Yong Peng; ஆங்கிலம்: Yong Peng Town; சீனம்: 永平); ஜாவி: يوڠ ڤيڠ) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.
ஜொகூர் பாரு நகர மையத்தில் இருந்து 104 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. யோங் பெங் என்பது ஒரு சீனப் பெயர். அந்த வகையில் இங்கு சீனர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். யோங் பெங் நகரத்தைச் சீனர் நகரம் என்றும் சொல்வார்கள்.
யோங் பெங் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.[1]
வரலாறு[தொகு]
1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூரின் சுல்தான் அபுபக்கர் ஆட்சியின் காலத்தில், ஜொகூரை நவீன மயமாக்குவதற்கும், வரி வருவாயை அதிகரிப்பதற்கும் ஜொகூரில் ஒரு கொள்கை தொடங்கப் பட்டது. மிளகுத் தோட்டங்கள்; ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.
அவ்வாறு தோட்டங்கள் உருவாக்கப் படுவதற்கு ஏராளமான தொழிலாளர்கள் தேவைப் பட்டது. தற்செயலாக அந்த காலக் கட்டத்தில் தெற்கு சீனாவில் சில அரசியல், சமூகக் குழப்பங்கள் ஏற்பட்டன. அதனால் சீனாவில் இருந்து ஆயிரக் கணக்கான சீனர்கள் ஜொகூரில் குடியேறினார்கள்.
சீனர் முன்னோடிகள்[தொகு]
தொடக் காலத்தில் குடியேறிய சீனர் முன்னோடிகளில் சிலர், பெக்கோக் ஆற்றின் ஆற்றின் வழியாகப் பயணித்து யோங் பெங் பகுதியில் குடியேறினார்கள். அப்போது யோங் பெங் வேளாண்மைக்கு நல்ல ஒரு வளமான நிலமாக இருந்தது.
விவசாயப் பணிகளில் ஈடுபட்டனர். கரும்புத் தோட்டங்கள்; மரவள்ளித் தோட்டங்களும் உருவாக்கப் பட்டன. அந்த வகையில் யோங் பெங் நகரமும் படிப்படியாக வளர்ச்சி கண்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Official Portal of Yong Peng District Council (MDYP) |" (in en). http://www.mdyongpeng.gov.my/en. பார்த்த நாள்: 14 June 2021.