உள்ளடக்கத்துக்குச் செல்

பூலோ காசாப்

ஆள்கூறுகள்: 2°33′19″N 102°45′43″E / 2.55528°N 102.76194°E / 2.55528; 102.76194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூலோ காசாப்
Buloh Kasap
 ஜொகூர்
Map
ஆள்கூறுகள்: 2°33′19″N 102°45′43″E / 2.55528°N 102.76194°E / 2.55528; 102.76194
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் சிகாமட் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்386 km2 (149 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
85000[1]
தொலைபேசி எண்கள்07-944
போக்குவரத்து பதிவெண்கள்J
சிகாமட் மாவட்டத்தில் பூலோ காசாப்

பூலோ காசாப் (மலாய்: Buloh Kasap; ஆங்கிலம்: Buloh Kasap; சீனம்: 巫罗加什) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் சிகாமட் நகரத்திற்கு வடக்கே 10 கிமீ தொலைவில் அமைந்து உள்ளது.

மலேசியக் கூட்டரசு சாலை 1 (Malaysia Federal Route 1), பூலோ காசாப் நகரின் முதனமைச் சாலையாக விளங்குகிறது. இந்தச் சாலை பூலோ காசாப் நகரத்தை கிம்மாஸ்; மற்றும் சிகாமட் நகரங்களுடன் இணைக்கிறது.

பொது[தொகு]

சிகாமட் நகரத்திற்கு அருகே அமைந்திருப்பதாலும்; பூலோ கசாப் நகர்ப்பகுதியில் உள்ள தாமான் யாயசான் தொழில்பூங்காவின் வளர்ச்சியாலும், இந்த நகரம், சிகாமட்டின் இரண்டு செயற்கை நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

துன் ரசாக் நெடுஞ்சாலை (Tun Razak Highway) பூலோ கசாப்பில் இருந்து சுமார் 4 கிமீ (2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

பெயர்[தொகு]

பூலோ கசாப் என்ற பெயர், ஒரு வகையான மூங்கில் இனத்தின் பெயரில் இருந்து உருவான மலாய் சொற்களாகும். இந்த நகரம் நிறுவப்பட்டபோது அங்கு அந்த வகையான மூங்கில்கள் அதிகமாகக் கிடைத்தன.

குறிப்பாக பூலோ கசாப் பழைய சந்தைக்கு அருகில் இந்த மரங்கள் இன்றும் உள்ளன. பூலோ கசாப் என்றால் மலாய் மொழியில் "கரடுமுரடான மூங்கில்" என்று பொருள்.[2]

வரலாறு[தொகு]

பூலோ கசாப்பின் பழைய பாலம் மலேசியக் கூட்டரசு சாலை 1 கட்டுமானத்தின் போது பிரித்தானிய மலாயா அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இருப்பினும், பிரித்தானிய வீரர்கள் இரண்டாம் உலகப் போரின் போது பாலத்தின் ஒரு பகுதியைத் தகர்த்து விட்டார்கள். [3][4]

சிங்கப்பூர் தீவை நோக்கி சப்பானியவீரர்களின் முன்னேற்றத்தைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்துவதற்காகப் பூலோ காசாப் பாலம் தர்க்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்ததும் புதிய பாலம் கட்டப்பட்டது.

இருப்பினும் இந்தப் பாலம் 1964-இல் ஜொகூரில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் போது, 9-ஆவது மைலில் உள்ள பாலத்துடன் சேர்ந்து அடித்துச் செல்லப்பட்டது. அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டது. அப்போது தற்காலிகமாக ஒரு பெய்லி பாலமும் கட்டப்பட்டது. தற்போது புதிய பாலம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. பழைய பாலத்தின் எச்சங்களை இன்றும் இங்கு காணலாம்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Buluh Kasap, Segamat - Postcode - 85000 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 30 March 2024.
  2. MAKHBUL, DR ZAFIR KHAN MOHAMED (29 July 2019). "The name Buloh Kasap was derived from a Malay word for a species of rough bamboo". Sinar Harian. பார்க்கப்பட்ட நாள் 30 March 2024.
  3. "Extracts of Singapore Burning". Colin Smith. May 2006. http://www.colin-smith.info/pages/books/extracts/singapore_burning/extract_05.htm. 
  4. Wigmore 1957, p. 220.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலோ_காசாப்&oldid=3923835" இலிருந்து மீள்விக்கப்பட்டது