ஜொகூர் பெசார் தீவு

ஆள்கூறுகள்: 2°26′30″N 103°59′00″E / 2.44167°N 103.98333°E / 2.44167; 103.98333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜொகூர் பெசார் தீவு
Pulau Besar Johor)
Johor Besar Island
அழகிய ஜொகூர் பெசார் தீவு
அழகிய ஜொகூர் பெசார் தீவு
Map
புவியியல்
அமைவிடம்மெர்சிங் மாவட்டம், ஜொகூர்
 மலேசியா
தென் கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்2°26′30″N 103°59′00″E / 2.44167°N 103.98333°E / 2.44167; 103.98333
தீவுக்கூட்டம்தீபகற்ப மலேசியா; மலேசியா
மொத்தத் தீவுகள்1
உயர்ந்த ஏற்றம்258 m (846 ft)
நிர்வாகம்
ஜொகூர் பெசார் தீவின் படகுத்துறை

ஜொகூர் பெசார் தீவு அல்லது பாபி பெசார் தீவு (மலாய்: Pulau Besar Johor; ஆங்கிலம்:Johor Besar Island அல்லது Babi Besar Island) என்பது மலேசியா, ஜொகூர், மெர்சிங் மாவட்டத்தில் உள்ள ஒரு தீவாகும்.

இந்தத் தீவு, ராவா தீவு, சிபு தீவு மற்றும் திங்கி தீவு ஆகிய தீவுகளால் சூழப்பட்டுள்ளது. இது ஓர் அமைதியான தீவு. இங்கு தூள் போன்ற வெள்ளை மணல் பரப்பு; மற்றும் படிகம் போன்ற தெளிவான நீரினால் சூழப்பட்ட அழகிய கடற்கரைகள் உள்ளன.[1]

தூய்மையான வெள்ள மணல் பரப்பில் ஓய்வு எடுப்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்து அதிகமான சுற்றுப் பயணிகள் இங்கு வருகின்றனர்.[2]

பொது[தொகு]

இந்த தீவைப் பற்றிய ஒரு புராணக்கதை உள்ளது. கர்ப்பமாக இருந்த ஒரு மீனவரின் மனைவி கடற்பாசி சாப்பிட விரும்பினாள். கடற்பாசியைச் சாப்பிட்டவுடன், அவள் ஒரு கடற்கன்னியாக மாறினாள். இதனால் அவரின் கணவர் வருத்தம் அடைந்தார்.

அதைப் பார்த்து அவர் பாபி! பாபி! என்று கத்தினார். அப்போதிருந்து, இந்தத் தீவு "புலாவ் பாபி" ("பன்றி தீவு") என்றும் அழைக்கப்படுகிறது.[3]

கடல்வாழ் உயிரினங்கள்[தொகு]

இந்த தீவில் 60 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க, இந்தத் தீவை ஒரு கடல் பூங்காவாக ஜொகூர் மாநில அரசு தன் அரசிதழ் வழியாக அறிவித்து உள்ளது. கடல்வாழ் உயிரினங்களை; அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பாதுகாக்க, தீவின் 2 கி.மீ. கடல் எல்லைக்குள் மனிதச் செயல்பாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

தீவின் மிக உயரமான இடம் கடல் மட்டத்திலிருந்து 845 அடி உயரத்தில் உள்ளது. தீவு முழுவதும் காட்டுத் தாவரங்களின் செழுமைகள் நிரம்பியுள்ளன. தென்னை மரங்கள் மற்றும் வெப்பமண்டல காடுகளின் அடர்த்தியான பசுமைகள் இங்கு அதிகமாய்க் காணப்படுகின்றன.

கிராமங்கள்[தொகு]

இந்தத் தீவில் ஆறு சிறிய கிராமங்கள் உள்ளன.

  • அத்தாப் சிங் கிராமம்
  • பத்து ஈத்தாம் கிராமம்
  • பூசோங் கிராமம்
  • தெலுக் பக்காவ் கிராமம்
  • தெலுக் கம்பா கிராமம்
  • தெலுக் பெனகாட் கிராமம்

ஜொகூர் பெருநிலத்தில் உள்ள மெர்சிங் நகரில் இருந்து இந்தத் தீவை படகு மூலம் அணுகலாம்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aseania Resort Pulau Besar". Pulaubesar.net. பார்க்கப்பட்ட நாள் 13 November 2013.
  2. (in en) South China Sea. ProStar Publications. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57785-652-8. https://books.google.com/books?id=_Cavs681Ym8C&dq=%22pulau+babi+besar%22&pg=PA145. 
  3. Zainul, Tihah (16 February 2019). "Kisah Lagenda Pulau Babi Besar dan Misteri Ikan Duyung di Johor". I Am Lejen. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_பெசார்_தீவு&oldid=3910563" இலிருந்து மீள்விக்கப்பட்டது