கடற்பாசி
கடற்பாசி, அல்லது பெரும்பாசி, பல வகையாக புலப்படும், பன்னணு, கடற்பாசிகளைக் குறிக்கிறது. இதில் சில வகையான சிவப்பு (ரோடோஃபிட்டா), பழுப்பு (ஃபியோஃபிட்டா ), பச்சை (குளோரோஃபிட்டா ) நிறப்பாசிகள் ஆகியவை அடங்கும். கெல்ப்ஸ் போன்ற கடற்பாசி இனங்கள் மீன்வளம் மற்றும் பிற கடல் உயிரினங்களுக்குத் தேவையான நாற்றாங்கால் வாழ்விடத்தை வழங்குகின்றன, இதனால் உணவு மூலங்களை பாதுகாக்கின்றன; மிதக்கும் பாசிகள் போன்ற பிற இனங்கள் கரியமிலத்தைக் (கார்பனைக்) கைப்பற்றுவதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன, பூமியின் உயிர்வளி (ஆக்ஸிஜன்) 90% வரை இதனால் உற்பத்தி செய்கின்றன. இவற்றின் பங்குகளைப் புரிந்துகொள்வது பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான கொள்கைகளை வழங்குகிறது.
வகைபாடு
[தொகு]"கடற்பாசி" க்கு முறையான வரையறை இல்லை.
சூழலியல்
[தொகு]கடற்பாசிகள் அவற்றின் உணவை உற்பத்திச் செய்ய உப்பு நீர் மற்றும் ஒளிச்சேர்க்கை ஆகிய இரு மூலக்கூறுகள் தேவைப்படுகிறது. இவற்றுடன் 'ஒட்டிணைப்புப் புள்ளிடம்' மேலும் ஒரு தேவைக்கூறாக இருக்கும். எனினும், 'ஸர்காஸம்' மற்றும் 'கிராசிலேரியா' போன்ற வகைகள் மிதக்கும் இனங்களாக உள்ளன. கரையோரப்பகுதிகளில் பரவலாக வளரக்கூடியவை.
இப்பாசி உயிர்வகைகள் பலவகையான சுற்றுச்சூழற்களில் பரவியுள்ளாது. சிலவை மேல்பரப்பிலும் சிலவை கடலுக்குள்ளும் காணப்பெறும்.
சிவப்பு பாசி இனம் ஆழ்கடலுக்குள் வாழுமினம்.
உற்பத்தி
[தொகு]2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மொத்த பாசி உற்பத்தியில் 96 சதவீதமாக 2,165,675 மெட்ரிக் டன்களில் உற்பத்தி செய்யப்பட்டது. [1]
நாடு | ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் </br> வருடத்திற்கு |
---|---|
சீனா | 699 |
பிரான்ஸ் | 617 |
ஐக்கிய இராச்சியம் | 205 |
ஜப்பான் | 123 |
சிலி | 109 |
பிலிப்பைன்ஸ் | 96 |
வட கொரியா | 71 |
தென் கொரியா | 67 |
இந்தோனேஷியா | 47 |
நார்வே | 41 |
பயன்கள்
[தொகு]கடற்பாசிகள் உணவு உற்பத்தி, அகார் உற்பத்தி போன்ற பயன்களை கொண்டுள்ளது.[2]
உணவு
[தொகு]உலகெங்கிலும், குறிப்பாக கிழக்கு ஆசியாவில், கடற்பாசி நுகரப்படுகிறது, எ.கா. ஜப்பான், சீனா, கொரியா, தைவான் மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளான,புருனே, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா [3] அவற்றுடன், தென்னாப்பிரிக்கா, பெலிஸ், பெரு, சிலி, கனடிய கடல்சார், ஸ்காண்டிநேவியா, தென் மேற்கு இங்கிலாந்து, [4] அயர்லாந்து, வேல்ஸ், ஹவாய், கலிபோர்னியா, மற்றும் ஸ்காட்லாந்து.
மருந்து மற்றும் மூலிகைகள்
[தொகு]அல்ஜினேட்டுகள் காயம் ஒத்தடம் ( ஆல்ஜினேட் டிரஸ்ஸிங் பார்க்கவும்) மற்றும் பல் அச்சுகளில் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணுயிரியலில், அகார் ஒரு வளர்ப்பு ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கராஜீனன்கள், அல்ஜினேட் மற்றும் அகரோஸ்கள், பிற காண்பாசிகளின் பன்சக்கரைடுகளுடன், உயிரிமருந்து பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. சிவப்பு மற்றும் பச்சை பாசிகளிலிருந்து வரும் சல்பேட் சாக்கரைடுகள் சில தாயனை மற்றும் ஆறனை வளர்ந்த வைரசுகளைத் தடுக்கின்றன. [5]
உயிரியக்கவியல்
[தொகு]பாசிகளின் வலுவான ஒளிச்சேர்க்கை, ஊட்டச்சத்துக்களுடன் ஒரு பெரிய உறவை உருவாக்குகிறது; இது விரும்பத்தகாத ஊட்டச்சத்துக்களை நீரிலிருந்து அகற்றி கடற்பாசி பயன்படுத்த அனுமதிக்கிறது (உதாரணமாக இறந்த மண்டலங்களில் காண்பனவை). கடற்பாசி உயிர்வளியையும் உருவாக்குகிறது,
பருவநிலை மாற்றம்
[தொகு]"பெருங்கடல் காடு வளர்ப்பு" என்பது கரியமிலத்தை அகற்ற கடற்பாசி வளர்ப்பதற்கான ஒரு திட்டமாகும்.
உடல்நல இடர்கள்
[தொகு]அழுகும் நிலையிலுள்ள கடற்பாசிகள், நச்சுள்ள அய்டரோஜன் சல்பைடு வாயுவை வெளிவிடுகின்றனர். இது உடல்நலத்தைப் பாதிக்கும்.
- ↑ "Volume of seaweed production ranked by country". surialink.seaplant.net. Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ "Springtime's foraging treats". The Guardian. 2007-01-06. http://lifeandhealth.guardian.co.uk/guides/freestuff/story/0,,1981372,00.html. பார்த்த நாள்: 2008-07-16.
- ↑ Application of seaweed (Kappaphycus alvarezii) in Malaysian food products. 4 Jan 2020. https://www.researchgate.net/publication/338254486.
- ↑ "Devon Family Friendly – Tasty Seaweed Recipe – Honest!". BBC. 2005-05-25. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
- ↑ Kazłowski B.; Chiu Y. H.. "Prevention of Japanese encephalitis virus infections by low-degree-polymerisation sulfated saccharides from Gracilaria sp. and Monostroma nitidum". Food Chem. 133 (3): 866–74. doi:10.1016/j.foodchem.2012.01.106.