பெமாங்கில் தீவு

ஆள்கூறுகள்: 2°34′52″N 104°19′37″E / 2.58111°N 104.32694°E / 2.58111; 104.32694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெமாங்கில் தீவு
Pemanggil Island
Pulau Pemanggil
பெமங்கில் தீவு
பெமங்கில் தீவு
10 கி.மீ. தொலைவில் இருந்து பெமங்கில் தீவு
Map
புவியியல்
அமைவிடம்தென் சீனக் கடல்
ஆள்கூறுகள்2°34′52″N 104°19′37″E / 2.58111°N 104.32694°E / 2.58111; 104.32694
தீவுக்கூட்டம்தீபகற்ப மலேசியா; மலேசியா
மொத்தத் தீவுகள்1
பரப்பளவு8.508 km2 (3.285 sq mi)
உயர்ந்த ஏற்றம்223 m (732 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை34 (2020)
அடர்த்தி3.996 /km2 (10.35 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீடு86800

பெமாங்கில் தீவு (மலாய்: Pulau Pemanggil; ஆங்கிலம்:Pemanggil Island; சீனம்: 柏芒吉岛) என்பது மலேசியா, ஜொகூர், மெர்சிங் மாவட்டம், தென் சீனக் கடலில் உள்ள ஒரு தீவு.[1] ஜொகூர் பாருவின் மேற்குப் பக்கத்திலும், தியோமான் தீவிற்கு தெற்கிலும் அமைந்துள்ளது.[2]

பெமாங்கில் தீவு உண்மையில் ஒரு தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனுடன் மேலும் மூன்று தீவுகள் உள்ளன. அவை: அவுர் தீவு, லாங் தீவு மற்றும் டாயாங் தீவு.

மெர்சிங் நகரில் இருந்து கிழக்கே 45 கிமீ தொலைவில் தென் சீனக் கடலில் அமைந்துள்ள இந்தத் தீவு, ஜொகூர் கடல் பூங்காவின் (Johor Marine Park) ஒரு பகுதியாகும்.[3]

பொது[தொகு]

பெமாங்கில் தீவு ஆழ்கடல் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கும்; மற்றும் மார்லின் வகை மீன்கள்; கானாங்கெளுத்தி மீன்களுக்கும் பெயர் பெற்றது.

இந்தத் தீவின் வெளிப்பகுதியில் ஒரு மலையும்; வடகிழக்கு கடற்கரையில் தெலுக் லாங்காங் எனும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட விரிகுடாவும் உள்ளது. தீவின் மையத்தில், உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் பத்து புவாவு (Batu Buau) எனும் ஒரு பெரிய பாறையும் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

மெர்சிங் நகரில் இருந்து படகு மூலம் இந்தத் தீவை அணுகலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pemanggil Island | Pulau Pemanggil Mersing, Johor, Malaysia". attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  2. "How to get to Pemanggil · myisland.my". 7 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.
  3. "Pulau Pemanggil". Tourism Johor. Archived from the original on 2019-09-08.
  4. "Pemanggil Island Jetty · myisland.my". 7 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெமாங்கில்_தீவு&oldid=3911068" இலிருந்து மீள்விக்கப்பட்டது