உள்ளடக்கத்துக்குச் செல்

பீசாங் தீவு

ஆள்கூறுகள்: 1°29′03″N 103°13′17″E / 1.48417°N 103.22139°E / 1.48417; 103.22139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீசாங் தீவு
Johor Pineapple Island
Pulau Nanas Johor
பீசாங் தீவு
பீசாங் தீவு
ஜொகூர் பீசாங் தீவு
Map
புவியியல்
அமைவிடம்மலாக்கா நீரிணை
பொந்தியான் கிச்சில், பொந்தியான் மாவட்டம்
ஜொகூர்  மலேசியா
ஆள்கூறுகள்1°29′03″N 103°13′17″E / 1.48417°N 103.22139°E / 1.48417; 103.22139
தீவுக்கூட்டம்தீபகற்ப மலேசியா; மலேசியா
மொத்தத் தீவுகள்1
பரப்பளவு0.3 km2 (0.12 sq mi)
நீளம்1.78 km (1.106 mi)
உயர்ந்த ஏற்றம்80 m (260 ft)
நிர்வாகம்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்

பீசாங் தீவு அல்லது வாழைப்பழத் தீவு (மலாய்: Pulau Pisang Johor; ஆங்கிலம்:Johor Pisang Island; சீனம்: 香蕉屿; சாவி: باڤولاو ڤيسڠ) என்பது மலேசியா, ஜொகூர், பொந்தியான் மாவட்டம், பொந்தியான் கிச்சில், ஜொகூர் நீரிணையில் உள்ள ஒரு தீவாகும்.

பொந்தியான் கிச்சில் நகரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், பெனுட் நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. அதன் பெயர் புலாவ் பீசாங் கலங்கரை விளக்கம். பரபரப்பான சிங்கப்பூர் நீரிணையின் மேற்கு நுழைவாயிலில் கப்பல்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.[1]

பொது

[தொகு]

மலேசியாவிற்குச் சொந்தமான அந்தத் தீவின் கலங்கரை விளக்கத்தை, தற்போது சிங்கப்பூர் அரசாங்கம் பராமரித்து வருகிறது. இருப்பினும் அந்த தீவு, மலேசியப் பிரதேசம் என்பதை சிங்கப்பூர் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.[2]

1900-ஆம் ஆண்டில் அப்போதைய ஜொகூர் சுல்தானான, சுல்தான் இப்ராகிமிற்கும் பிரித்தானிய சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை தொடர்ந்து புலாவ் பீசாங் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.[3]

புலாவ் பீசாங் கலங்கரை விளக்கம்

[தொகு]

2003-ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் சண்முகம் ஜெயக்குமார், புலாவ் பீசாங்கின் இறையாண்மை மலேசியாவிடம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். அந்த இறையாண்மையை அவர் மறுக்கவில்லை. இருப்பினும், புலாவ் பிசாங் கலங்கரை விளக்கத்தின் நிர்வாகம் சிங்கப்பூருடன் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.[4][5]

2010-ஆம் ஆண்டில், பீசாங் தீவு என்பது ஜொகூர் சுல்தானகத்தின் ஒரு பகுதி என்றும், அது ஜொகூர் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் ஜொகூர் அரசாங்கம் அறிவித்தது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ISA, MOHD HAIKAL (28 January 2023). "The small island is located not far from Pontian, which is about 12 kilometers (km)". Kosmo Digital. பார்க்கப்பட்ட நாள் 17 March 2024.
  2. "Pulau Pisang won't be another Batu Puteh". New Straits Times. 27 May 2008. பார்க்கப்பட்ட நாள் 16 May 2014.
  3. Pulau Pisang: Persekutuan runding dengan kerajaan Johor, mSTAR Online.
  4. Rusli, Mohd Hazmi Mohd (10 July 2019). "Singapore lighthouse on a Malaysian island - New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  5. "BILATERAL RELATIONS WITH MALAYSIA: WATER AND OTHER ISSUES".
  6. "Pulau Pisang to be gazetted as part of Johor". www.asiaone.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீசாங்_தீவு&oldid=3911187" இலிருந்து மீள்விக்கப்பட்டது