உள்ளடக்கத்துக்குச் செல்

கானாங்கெளுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த கும்புளா மீன்கள்

கானாங்கெளுத்தி (Mackerel) என்பது ஆழ்கடலில் வாழும் வெவ்வேறு இன மீன்களைக் குறிக்கும் பொதுவான பெயராகும். ஸ்கோம்பிரிடே என்ற குடும்பத்தில் உள்ள பெரும்பாலான மீன் இனங்கள் கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்தவையாக உள்ளன.

இவை வெப்பநிலை மற்றும் வெப்ப மண்டல கடல்களிலும் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை கடலோரப் பகுதில் உள்ள நீரிலேயே வாழ்கின்றன.

உணவாக

[தொகு]

உலகளவில் உண்ணப்படும் மீன் உணவுகளில் கானாங்கெளுத்தி முக்கியமானதாகும்.[1] எண்ணெய் மீனான இதில் ஒமேகா-3 கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது. [2] கானாங்கெளுத்தியின் சதை விரைவாக கெட்டுவிடக் கூடியது என்பதால் இது நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே முறையாகப் பதப்படுத்திய மீன்களைத் தவிர மற்ற மீன்களைப் பிடித்த நாள்றே உண்டுவிட வேண்டும். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Croker, Richard Symonds (1933). The California mackerel fishery. Division of Fish and Game of California. pp. 9–10.
  2. Jersey Seafood Nutrition and Health, State of New Jersey Department of Agriculture, பார்க்கப்பட்ட நாள் 6 April 2012
  3. Scombrotoxin (Histamine) பரணிடப்பட்டது 13 சூலை 2012 at the வந்தவழி இயந்திரம் Food Safety Watch, November 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானாங்கெளுத்தி&oldid=4050856" இலிருந்து மீள்விக்கப்பட்டது