அடுக்குப்பல் சுறா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அடுக்குப்பல் சுறா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | கோன்டிரிக்தைசு |
வரிசை: | கர்கரினிஃபார்மீசு |
குடும்பம்: | எமிகாலெய்டீ |
பேரினம்: | எமிப்ரிசுடிசு |
இருசொற் பெயரீடு | |
எமிப்ரிசுடிசு எலோங்கெட்டா | |
![]() | |
அடுக்குப்பல் சுறாவின் எல்லைகள் |
அடுக்குப்பல் சுறா (Hemipristis elongata) என்பது எமிகாலெய்டீ என்ற குடும்பத்தைச் சேர்ந்த சுறா மீன் இனம் ஆகும். இது இந்திய-பசிபிக் பெருங்கடல்களில் காணப்படுகின்றது. இவை 240 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியவை ஆகும். உணவுக்காக அதிகம் பிடிக்கப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது இவை அழிவாய்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பெயருக்கேற்றறவாறு இவற்றின் மேல் தாடையில் கூரான ரம்பம் போன்ற பற்களும் கீழ் தாடையில் நெருக்கமான பற்களும் அடுக்குவரிசையில் அமைந்திருக்கும். இவற்றின் உடலமைப்பு இருமுனையில் கூம்பிய அமைப்பில் இருப்பதால் நீரில் வேகமாக நீந்த உதவுகிறது.