ரோகு மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரோகு
Labeo rohita.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: Actinopterygii
வரிசை: Cypriniformes
குடும்பம்: Cyprinidae
பேரினம்: Labeo
இனம்: L. rohita
இருசொற் பெயரீடு
Labeo rohita
F. Hamilton, 1822

ரோகு (Rohu அல்லது roho labeo (Labeo rohita, இந்தி (ம)நேபாளத்தில்- रोहू मछली, ஒடியா- ରୋହୀ,) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும்.இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 3 அடி நீளம் உடையது.[சான்று தேவை] 30 கிலோ எடையளவுக்கு வளரும்.[சான்று தேவை] இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

தோற்றம்[தொகு]

இம்மீனின் தலை கடலாவின் தலையைவிட சிறியது.இம்மீனின் கீழ் உதடு சுருக்கங்களுடன் காணப்படும், இம்மீனின் வாய் நேராக திறந்திருக்கும், இதன் செதில்கள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

உணவுப் பழக்கம்[தொகு]

இது குளத்தின் நடு அல்லது இடைமட்டத்தில் உள்ள, தாவர விலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இது ஓர் ஆண்டில்3/4 முதல் 1 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.[1]

இனப்பெருக்கக் காலம்[தொகு]

இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

உசாத்துணை[தொகு]

காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை

  1. http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_carps_ta.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகு_மீன்&oldid=2189691" இருந்து மீள்விக்கப்பட்டது