கடல் ஊசி மீன்
கடல் ஊசி மீன் | |
---|---|
![]() | |
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை |
வரிசை: | பெலோனிபார்மிசு |
குடும்பம்: | முரல் மீன் |
பேரினம்: | பெலோன் |
இனம்: | பெ. பெலோன் |
இருசொற் பெயரீடு | |
பெலோன் பெலோன் (லின்னேயஸ், 1761) | |
![]() | |
முரல் மீன் வாழும் பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
|
கடல் ஊசி மீன் (garfish, Belone belone, அல்லது sea needle), என்பது ஒரு வகை கடல் மீனாகும். இவை அத்திலாந்திக்குப் பெருங்கடல், நடுநிலக் கடல், கரிபியக் கடல் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்[தொகு]
இந்த மீன் நீண்டு மெல்லியதான, தட்டையான உடலமைப்பைக் கொண்டது. இவை 50 முதல் 75 சென்டிமீட்டர்கள் (20 முதல் 30 அங்) வரை வளரக்கூடியவை. இவற்றின் நீண்ட கூரிய பற்கள் நிறைந்த மூக்கே இவற்றின் ஆயுதமாக உள்ளது. இவற்றின் மார்பு, முதுகுப்புற மற்றும் குத துடுப்புகள் நன்கு நீண்டு அமைந்துள்ளன மற்றும் பின்புறமுள்ள முதுகு, குதத் துடுப்புகள் எதிரெதிராக இரண்டும் ஒரே தோற்றத்தில் உள்ளன. உடல் நீலம் தோய்ந்த பச்சை நிறத்துடனும் வயிற்றுப்பகுதி வெள்ளி சாம்பல் நிறத்துடனும் இருக்கும். மேலும் இதன் எலும்புகளும் பச்சை நிறத்தில் இருக்கும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Garfish: Belone belone". NatureGate. http://www.luontoportti.com/suomi/en/kalat/garfish. பார்த்த நாள்: 2013-12-16.