களவாய் மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களவாய் மீன்
புதைப்படிவ காலம்:55–0 Ma

Eocene to present[1]
Goliathgrouper1.jpg
Atlantic Goliath grouper, Epinephelus itajara
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: பேர்சிஃபார்மீசு
குடும்பம்: செரானைடீ
துணைக்குடும்பம்: Epinephelinae
பேரினம்: Epinephelus
Bloch, 1793
இனங்கள்

See text.

களவாய் மீன் (Epinephelus) என்பது ஒருவகை அரிய கடல் மீன் இனம் ஆகும். களவாய் மீன்களில் பல இரக மீன்கள் இருக்கின்றன. என்றாலும், தமிழ்நாட்டின பாம்பன் கடல் பகுதியில் தாழங்களவாய், புள்ளிக் களவாய், மரக்களவாய், சாம்பல்நிறக் களவாய், சிவப்புக் களவாய் ஆகிய வகை மீன்கள் காணப்படுகின்றன. இதில் சிவப்புக் களவாய் மீன் அந்தமான் கடல் பகுதியில் காணப்பக்கூடியவை. அரிதாக சிலசமயம் தமிழகக் கடல் பகுதியில் பிடிபடும்.[2]

இந்த களவாய் மீன்கள் ஆண், பெண் தன்மைகள் கலந்தே பிறக்கின்றன. இதில் சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் தன்மை இந்த மீன்களுக்கு உண்டு. ஆண் மற்றும் பெண் தன்மைகளோடு முதல் 4 ஆண்டுகள் இருக்கும். அதைத் தொடர்ந்து களவாய் மீன் 2 அடி நீளம் வளர்ச்சி அடைந்து பெண்ணாக இனமுதிர்ச்சி அடையும். மீண்டும் தன்னுடைய 15-வது வயதில் இவை ஆண் மீனாக மாறுகின்றன. களவாய் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால், அதிக வயதான பெண் மீன்கள், ஆணாக மாறாமல் பெண்ணாகவே இருந்து தன்னுடைய இனத்தைப் பெருக்கும்.[3][4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=களவாய்_மீன்&oldid=3344781" இருந்து மீள்விக்கப்பட்டது