கொண்டல் (மீன் குடும்பம்)
(கொண்டல் (மீன்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொண்டல் | |
---|---|
![]() | |
லுத்யானசு கிப்பசு (Lutjanus gibbus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்ட்டினோட்டெரிகீ |
வரிசை: | பேர்சிஃபார்மசு |
துணைவரிசை: | பேர்கோடீயை |
குடும்பம்: | லுத்யானைடீ |
கொண்டல் மீன்கள் (Snappers) என்பவை பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை பெரும்பாலும் கடலில் வாழ்கின்றன. ஆயினும், கயவாய்ப் (ஆற்றுக் கழிமுகம்) பகுதிகளில் வாழும் சில இனங்கள் உணவுக்காக நன்னீருக்குச் செல்கின்றன. இதில் மொத்தம் 113 இனங்களில் சில இனங்கள் முக்கியமான உணவு மீன்களாக உள்ளன.
இவை எல்லாப் பெருங்கடல்களிலும் வெப்பவலய மற்றும் துணை வெப்பவலயப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. பெரும்பாலானவை புறவோட்டு உயிரினங்களை அல்லது பிற மீன்களை இரையாகக் கொள்கின்றன.[1] மிதவைவாழிகளை உணவாகக் கொள்ளும் சில இனங்களும் இக் குடும்பத்தில் உள்ளன. இவை காட்சியகங்களில் வைக்கப்படுவது உண்டு. எனினும், இவை மிக விரைவாக வளர்வதால் இவை அதிகம் விரும்பப்படுவது இல்லை. இவை பொதுவாக 450 மீட்டர் ஆழம் வரை வாழ்கின்றன.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bray, Dianne. "LUTJANIDAE". http://www.fishesofaustralia.net.au/home/family/308. பார்த்த நாள்: 29 September 2014.