உள்ளடக்கத்துக்குச் செல்

பேர்சிஃபார்மீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேர்சிஃபார்மசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெர்சிபார்மிசு
புதைப்படிவ காலம்:Late Cretaceous–recent
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெர்சிபார்மிசு
மாதிரி இனம்
ஐரோப்பிய ஈட்டி மீன், பெர்கா புளுவியாடிலிசு
லின்னேயசு, 1758
துணைவரிசை

உரையில்

பெர்சிபார்மிசு (Perciformes)(/ˈpɜːrsɪˌfɔːrmiːz/), என்பது பெர்கோமார்பா அல்லது அகாந்தோப்டெரி என்றும் அழைக்கப்படுகிறது. இது கதிர் மீனின் ஒரு வரிசை அல்லது மீப்பெரும் வரிசை ஆகும். இதனை ஒற்றை வரிசையாகக் கருதினால், இவை முதுகெலும்பு உயிரிகளை மிக அதிகமாக கொண்டுள்ள வரிசையாகும், இதில் 41% எலும்பு மீன்கள் உள்ளன. பெர்சிபார்மிசு என்றால் "பரண் போன்றது" என்று பொருள். பெர்சிபார்மிசு என்பது "பரண் போன்ற" பெர்கோமார்பு மீன்களை கொண்ட உட்கிளையான பெர்கோமார்பாவில் உள்ள ஒரு வரிசையாகும். இவை அனைத்து நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் காணப்படும். சுமார் 10,000 சிற்றினங்கள் இந்தக் குழுவில் உள்ளன. இந்த வரிசையில் சுமார் 160 குடும்பங்கள் உள்ளன. இது முதுகெலும்புகளுக்குள் இருக்கும் எந்த வரிசையினைக் காட்டிலும் அதிகம் ஆகும்.[1] இது 7 மிமீ (1⁄4 அங்குலம்) அளவுடைய சிண்ட்லேரியா பிரீவிபிங்குயிசு முதல் 5 மீ (15 அடி) நீளமுடைய மார்லின் வரையிலான முதுகெலும்புகளின் மிகவும் மாறுபட்ட அளவிலான மீன்களைக் கொண்ட வரிசையாகும். கிரெட்டேசியசின் பிற்காலத்தில் முதன் முதலாகத் தோன்றி பல்வேறு வகையில் பரவிக் காணபப்டுகின்றன. இந்த குழுவின் நன்கு அறியப்பட்ட மீன்களாக பெர்ச் மற்றும் ஈட்டி மீன் (பெர்சிடே), கொடுவா மற்றும் களவாய் மீன் (செர்ரானிடே) உள்ளன.[2]

பண்புகள்

[தொகு]

முதுகு மற்றும் குத துடுப்புகள் முன்புற முள்ளெலும்பு மற்றும் பின்புற மென்மையான-கதிர் பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. இவை பகுதி அல்லது முழுமையாக பிரிக்கப்படலாம். இடுப்பு துடுப்புகள் வழக்கமாக ஒரு முள்ளெலும்பு மற்றும் ஐந்து மென்மையான கதிர்களைக்கொண்டுள்ளன. இவை வழக்கத்திற்கு மாறாக கன்னத்தின் கீழ் அல்லது வயிற்றின் கீழ் முன்னோக்கி அமைந்துள்ளன. செதில்கள் பொதுவாக டீனாய்டு செதிகளாகவும் (தொடுவதற்கு கடினமானது), இருப்பினும் சில நேரங்களில் இவை சைக்ளோயிட் செதில்களாகவும் (தொடுவதற்கு மென்மையானது) அல்லது வேறுவிதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வகைப்பாட்டியல்

[தொகு]

பெர்சிபார்மிசின் வகைப்பாடு சர்ச்சைக்குரியது. கிளைப்பாட்டியல் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு பாரம்பரியமாக வரையறுக்கப்பட்டபடி, பெர்சிபார்மிசு இணைதொகுதிமரபு வகையினைச் சார்ந்ததாக வகைப்படுத்தப்பட்டது. இசுகார்பேனிபார்மிசு, டெட்ராடோன்டிபார்மிசு மற்றும் தட்டை மீன்கள் ஆகியவை துணைவரிசைகளாக சேர்க்கப்பட வேண்டிய பிற வரிசைகள். தற்போது அங்கீகரிக்கப்பட்ட துணைப்பிரிவுகளில், பல இணைதொகுதிமரபு ஆகவும் இருக்கலாம். இவை பொதுவாக உலகில் உள்ள மீன்கள் (Fishes of the World) என்ற மேற்கோள் பனுவலைப் பின்பற்றி, துணைக்குடும்பம்/மீப்பெரும் வரிசையாகத் தொகுக்கப்படுகின்றன.[1][3][4][5]

பெர்சிபார்மிசு தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில்
போமாகேந்தது செமிசர்சுலேடசு
நெல்சன் 2015[5] பெட்னாகூர்-ரோட்ரிகசு மற்றும் பலர்2017[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Nelson, J. S. (2006). Fishes of the World (4 ed.). Hoboken, NJ: John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-25031-9.
  2. "Perciform - Form and function". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-14.
  3. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2015). "Perciformes" in FishBase. August 2015 version.
  4. "ADW: Perciformes". animaldiversity.ummz.umich.edu. Animal Diversity Web.
  5. 5.0 5.1 J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. pp. 430–467. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34233-6.
  6. Betancur-R, Ricardo; Wiley, Edward O.; Arratia, Gloria; Acero, Arturo; Bailly, Nicolas; Miya, Masaki; Lecointre, Guillaume; Ortí, Guillermo (6 July 2017). "Phylogenetic classification of bony fishes". BMC Evolutionary Biology 17 (1): 162. doi:10.1186/s12862-017-0958-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2148. பப்மெட்:28683774. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்சிஃபார்மீசு&oldid=3605557" இலிருந்து மீள்விக்கப்பட்டது