பாறை மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Synanceia
Synanceia verrucosa Hennig.jpg
type species Synanceia verrucosa, 1801 illustration
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: Scorpaeniformes
குடும்பம்: Synanceiidae
பேரினம்: Synanceia
Bloch and Schneider 1801

பாறைமீன்கள் (Synanceiidae) என்ற மீன்குடும்பத்தில், 9 பேரினங்களும், 36 சிற்றினங்களும் கண்டறியப்பட்டுள்ளன.[1] இவை ஏறத்தாழ 35 செ. மீ. இருக்கும். நலைப்பெருத்துக் காணப்படும். உடலின் மேற்புற முட்களில் நஞ்சை செலுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஆழமற்ற கடற்கரைகளில், பவளப்பாறைகளில் பெரும்பாலும் வாழும் இயல்புடையன. வாழிடத்தினைப் போன்றே இதன் உடல் நிறம் இருப்பதால், இது இருப்பதே கண்ணுக்குத் தெரியாது. மேலும், அதிகம் நீந்தா இயல்புடையன. [2]

கல் மீன் (stonefish) எதிரியின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தரைமட்டத்தில் வாழும். இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. மிகவும் சோம்பேறி மீன். அசைவற்று அப்படியே கல் மாதிரி இருப்பதால் இப்பெயர் வந்தது. இந்தக் கல் மீன் மிகவும் சாந்தமானது. ஆனால் இது கல் மாதிரி இருப்பதால் அடையாளம் தெரியாமல் யாராவது இதை சீண்டிவிட்டால் நைசாக தன் முதுகுப்புற முள்ளை அப்படியே விரிக்கும். இந்த முள் நம் உடலில் குத்தும் போது விஷத்தை உடலில் பாய்ச்சிவிடும். விஷம் உடலில் ஏறியதும் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டு பயங்கரமாக கத்துவர். வாயில் நுரைத் தள்ளும். பனிரெண்டு மணி நேரம் இந்த வலி நீடிக்கும். தூக்க மருந்து வலி நிவாரண மருந்து எது கொடுத்தாலும் பலன் இருக்காது. கடித்த இடம் பயங்கரமாக வீங்கிவிடும். கடிபட்டவர் நிச்சயமாக இறந்துவிடுவார்.

அருங்காட்சியகத்தில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறை_மீன்&oldid=2196011" இருந்து மீள்விக்கப்பட்டது