வெள்ளைச் சுறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Great white shark
புதைப்படிவ காலம்:16–0 Ma[1]
Miocene to Recent
White shark.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: Chondrichthyes
துணைவகுப்பு: Elasmobranchii
வரிசை: Lamniformes
குடும்பம்: Lamnidae
பேரினம்: Carcharodon
A. Smith, 1838
இனம்: C. carcharias
இருசொற் பெயரீடு
Carcharodon carcharias
(L, 1758)
Cypron-Range Carcharodon carcharias.svg
Global range highlighted in blue

வெள்ளைச் சுறா, பெருச்சுறா, முண்டஞ்சுறா (The great white shark) என அழைக்கப்படுவது குருத்தெலும்பு மீன்கள் குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இவை கடல் உயிரினங்களிலேயே மனிதர்களை அதிகம் அச்சுறுத்தக் கூடியவை ஆகும். இதன் அறிவியல் பெயர் Carcharodon carcharias என்பது. இவற்றைக் கண்டு மனிதர்கள் அஞ்சக் காரணம் இவற்றின் இராட்சதத் தோற்றமாகும். இவை 12 முதல் 21 அடி நீளம் வரை இருக்கும். இவை ஆண்டுக்கு 25 முதல் 30 செ. மீ. வரை வளர்கின்றன.

உடலமைப்பு[தொகு]

புலிச் சுறாவின் பற்கள்
The teeth of tiger sharks are oblique and serrated to saw through flesh

இவற்றின் முதுகுப் பகுதி வெளிறிய சாம்பல் நிறத்திலும், வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். முதுகில் ஒன்று, இரண்டு பக்கங்களிலும் தலா ஒன்று என மொத்தம் மூன்று துடுப்புப் பகுதிகள் அமைந்திருக்கின்றன. இவற்றிற்கு சுமார் மூவாயிரம் பற்கள் உள்ளன. அவை இரண்டு வரிசைகளாக அமைந்துள்ளன. பெரிய வெள்ளைச் சுறாக்கள் தங்கள் இரையைப் பிடித்து, கடித்து, மென்று உண்பதற்கு இவை உதவுகின்றன. முன் வரிசைப்பல் உடைய நேர்ந்தாலோ அல்லது விழுந்து விட்டாலோ பின் வரிசைப் பல் அந்த இடத்திற்கு நகர்ந்து விடுகிறது.இந்தவகை சுறாக்களை மையமாகவைத்தே Steven Spielberg “Jaws" எனும் திரைப்படத்தை 1975 ல் வௌியிட்டார்

இனப்பெருக்கம்[தொகு]

தனது ஒன்பதாவது வயதில் இனபெருக்கம் செய்யும் பருவத்தை அடைகின்றன. ஒரு பெரிய பெண் வெள்ளை சுறாவானது தனது ஆயுளில் மொத்தம் இரண்டு முறை மட்டுமே குட்டி ஈனுகின்றன. கடலில் 3 அடி முதல் 1280 மீட்டர் ஆழம் வரை இவை குட்டிக்கரணம் அடித்தப்படியே சுற்றித்திரிகின்றன.

காணப்படும் இடங்கள்[தொகு]

அனைத்து கடல் தட்பவெப்ப நிலைகளிலும் வாழும் தன்மையுடைய இவை அமெரிக்காவின் கலிபோர்னியா முதல் அலாஸ்கா வரையிலும், கிழக்கு அமெரிக்க கடற்கரைகளிலும், அனைத்து வளைகுடா பகுதிகளிலும், அவாய், தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா முதல் ரஷ்யா வரையிலான கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. name="CA"
  2. name=iucn
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைச்_சுறா&oldid=3463463" இருந்து மீள்விக்கப்பட்டது