உள்ளடக்கத்துக்குச் செல்

கொய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொய் (Galathea gizzard shad, Nematalosa galatheae) என்னும் மீனினம் சவர் நீர்நிலைகளிலேயே கூடுதலாக வாழ்கிறது.

தோற்றம்[தொகு]

இம்மீன்கள் 16.3 செ.மீ வரை கண்டறியப்பட்டுள்ளன.

சூழியல்[தொகு]

இம்மீன்கள் பெரும்பாலும் கடல்களில் வாழ்ந்து வந்தாலும், இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் மட்டும் நன்னீர் ஆறுகளுக்குச் செல்லும் பண்புடையன.

பரம்பல்[தொகு]

இவை இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரை, வங்காள விரிகுடா, அந்தமான் கடல், தாய்லாந்து, இலங்கை சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளின் கடற்கரை முதலிய இடங்களில் காணப்படுகின்றன.

இலக்கியத்தில் கொய்[தொகு]

பொய்க் கெண்டை என்று அழைக்கப்படும் கொய் மீன் பற்றிய குறிப்பொன்று அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது.

"கை அனைத்தும் கலந்து எழுகாவிரி

செய் அனைத்திலும் சென்றிடும், செம்புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா

ஐயனைத்தொழுவார்க்கு அல்லல் இல்லையே" (188-3)

என்று ஐந்தாம் திருமுறையில் குறிப்பிடும் அப்பர் அடிகள் காவிரியின் வெள்ள நீரில் இம்மீன் மிகுந்த அளவில் வந்ததாக, மயிலாடுதுறை வட்டம், பழவாற்றின் கரையிலுள்ள திருக்குரக்காவல் எனும் ஊர்ப் பதிகத்தில் பாடியுள்ளார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  • "Nematalosa galatheae, Galathea gizzard shad : fisheries". பார்க்கப்பட்ட நாள் 2010-12-31.
  1. "Nematalosa galatheae (Galathea Gizzard Shad)". பார்க்கப்பட்ட நாள் 2010-12-31.
  2. வேதிமம் அழித்த வயல் மீன் வளம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், தமிழ்க்கூடல், முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், 3 மார்ச், 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்&oldid=3241916" இலிருந்து மீள்விக்கப்பட்டது