அயிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயிலை மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: பேர்சிஃபார்மீசு
குடும்பம்: கோரிஃபேனிடே
பேரினம்: கோரிபெனா
இனம்: கோ. ஹிப்புரஸ்

அயிலை மீன் (mahi-mahi) என்பது கடற்பரப்பில் வாழும் நடுமுள் துடுப்புள்ள மீன் ஆகும். இவை வெப்பம், வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை உணவு மற்றும் அலங்காரம் போன்ற வணிக நோக்கிற்காகப் பெருமளவில் பிடிக்கப்படுகின்றன. இவை குறைந்த காலத்தில் அதிகளவு இனப்பெருக்கம் செய்யும் மீன் ஆகும்.

குணங்கள்[தொகு]

அயிலை மீன்கள் பொதுவாக 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வாழும். ஆண் மீன்களை விட பெண் மீன்கள் அளவில் சிறியதாக இருக்கும். அயிலை மீன்கள் வேகமாக வளரும் மீன்களில் ஒன்றாகும். இவை பொதுவாக வெப்பமான கடல் மேற்பரப்பில் வாழ்கின்றன. கொன்றுண்ணி வகை மீன்களான இவை பறக்கும் மீன்கள், நண்டுகள், கணவாய்கள் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றை உண்டு வாழ்கின்றன.

இவை வழக்கமாக 4-5 மாதங்களாக இருக்கும் போது இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. பெண் அயிலை மீன்கள் ஒரு இனப்பெருக்கத்தின் முடிவில் சுமார் 80,000 முதல் 10,00,000 முட்டைகள் வரை இடுகின்றன. இவை வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இனப்பெருக்கம் செய்கின்றன.

  1. "The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species. பார்க்கப்பட்ட நாள் 2018-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயிலை&oldid=2646648" இலிருந்து மீள்விக்கப்பட்டது