கல்லாரல்
கல்லாரல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Mastacembelus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/MastacembelusM. armatus
|
இருசொற் பெயரீடு | |
Mastacembelus armatus (Lacepède, 1800) | |
வேறு பெயர்கள் [2] | |
|
கல்லாரல், சேற்றாரல், பேராரல்[3] ( Zig-zag eel, also known as the tire-track eel, tire-track spiny eel or marbled spiny eel) [2] என்பது மாஸ்டசெம்பெலிடே குடும்பத்தைச் சேர்ந்த மாஸ்டசெம்பெலஸ் (ஸ்கோபோலி, 1777) பேரினத்தைச் சேர்ந்த ரே-ஃபின்ட், ஸ்பைனி ஈல்ஸ் இனமாகும் .[4] இது இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, தென்கிழக்காசியாவின் பிற பகுதிகளில் உள்ள ஆற்று விலங்கினங்களுக்கு சொந்தமானது. இந்த இனம் 1800 ஆம் ஆண்டில் லாஸ்பீடால் என்பவரால் Macrognathus armatus என விவரிக்கப்பட்டது. இந்த பிரபலமான மீன் வகைகளின் மற்ற பொதுவான பெயர்கள் leopard spiny eel [5] மற்றும் white-spotted spiny eel போன்றவை ஆகும். இந்த இனம் பிரபலமான நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை மீனாக இருக்கிறது. மேலும் இது தன் பிறப்பிட நாடுகளில் உணவு மீனாக பயன்பாட்டில் உள்ளது.[2][6]
விளக்கம்
[தொகு]கல்லாரல் என்பது ஒரு பெரிய நீளமான மீன் ஆகும். இது இடுப்பு துடுப்புகள் இல்லாமல் பாம்பு போன்ற உடலைக் கொண்டுள்ளது. அதன் குத, முதுகு துடுப்புகள் நீளமானவை. அவை வால் துடுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. முதுகுத் துடுப்புக்கு முன்னால் ஏராளமான முள்தொடர்கள் உள்ளன.[7] இந்த மீன்களின் பின்புறம் அடர் பழுப்பு நிறத்திலும், தலை வெள்ளி பழுப்பு நிறத்திலும் இருக்கும். உடலின் நிறம் மங்கிய பழுப்பு நிறத்திலும், வயிறு லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலில் பழுப்பு நிற வட்ட வடிவக் குறிகள் இருக்கலாம். உடலில் ஒன்று முதல் மூன்று கரிய நீளமான ஜிக்ஜாக் கோடுகள் உள்ளன. அவை உடலின் மூன்றில் இரண்டு பங்குக்கு ஒரு தனித்துவமான வலைப்பின்னல் போன்ற வடிவத்துடன் இணைந்துள்ளன. கண்களில் பழுப்பு நிற கோடுகள் பக்கவாட்டில் செல்கின்றன.[2][6] கல்லாரல் மீன்கள் அதன் இயற்கையான வாழிடத்தில் 36" (91 செமீ) வரை வளர்கிறது. ஆனால் வளர்ப்பிடங்களில் பொதுவாக 20" (51 செ.மீ.) நீளமே வளர்கிறது.[2][6]
விலாங்கு போன்ற தோற்றம் இருந்தபோதிலும், கல்லாரல் உண்மையான விலாங்காக கருதப்படுவதில்லை.[7]
வாழ்விடம்
[தொகு]கல்லாரல்கள் என்பது இரவாடி மீன்கள் ஆகும். இவை உயர்நில நீரோடைகள், தாழ்நில ஈரநிலங்கள், அமைதியான நீர்ப் பகுதிகள், கடலோர சதுப்பு நிலங்களில், மணல் அல்லது பாறைகள் நிறைந்த ஆற்றுப்படுகைகள் மற்றும் கனமான தாவரங்களைக் கொண்ட ஆறுகளில் செழித்து வளரும். இவை வெப்பமண்டல கோடை மாதங்களிலும், வெள்ள காலங்களிலும் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் பிற வெள்ளம் பெருகும் பகுதிகளிலும் வசிக்கும்.[2][6]
உணவு
[தொகு]கல்லாரல் ஒரு இரவாடி ஊனுண்ணியாகும். பெந்திக் பூச்சி குடம்பிகள், மண்புழுக்கள், கரும்புழுக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சில தாவரப் பொருட்களைத் தீவனமாக உண்கின்றன . மீன் காட்சியகங்களில் வளர்க்கும்போது இவற்றிற்கு உயிருள்ள மீன்கள், தியூபிஃபெக்ஸ் புழுக்கள், உப்பு இறால்கள், கொசு குடம்பிகள், கிரில் மற்றும் கடல் மிதவைவாழிகள் போன்றவை நேரடி உணவாகத் தேவைப்படும்.[2][6][7]
இனப்பெருக்கம்
[தொகு]ஆண் மற்றும் பெண் கல்லாரல் மீன்கள் முதிர்ச்சியடையும் போது மட்டுமே வேறுபடுகின்றன. பொதுவாக ஆண் மீன்களை விட பெண் மீன்கள் குண்டாக இருக்கும். இயற்கை வாழிடத்தில் இவற்றின் கருவுறுதல் அதிகமாக இருந்தாலும், நீர்காட்சியகங்களில் வளர்க்கபட்ட நிலையில் வெற்றிகரமான இனப்பெருக்கத் முறைகள் எதுவும் இல்லை.[2][6]
குறிப்புகள்
[தொகு]- ↑ Fernado, M.; Kotagama, O.; de Alwis Goonatilake, S. (2019). "Mastacembelus armatus". IUCN Red List of Threatened Species 2019: e.T166586A60592409. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T166586A60592409.en. https://www.iucnredlist.org/species/166586/60592409. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Mastacembelus armatus" in FishBase. April 2006 version.
- ↑ தமிழ் கலைக்களஞ்சியம் தொகுதி 1, ஆரல்
- ↑ Integrated Taxonomic Information System, National Museum of Natural History, Washington, D.C., Mastacembelus armatus (Lacepède, 1800), Taxonomic Serial No.: 172692, 2007, retrieved on:5 June 2007.
- ↑ Leopard spiny eel (Mastacembelus armatus), BangkokAquarium.com, Bangkok, Thailand, 2006, retrieved on: 5 June 2007.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 Butler, Rhett Ayers, Tire track Eel, Spiny Eel, White-spotted Spiny Eel (Mastacembelus armatus), Tropical Freshwater Aquarium Fish (TFAF), 1995 and Mongabay.com, 2006, retrieved on: 5 June 2007.
- ↑ 7.0 7.1 7.2 Foster and Smith, Veterinary & Aquatic Services Department, Drs.