கொசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொசு
புதைப்படிவ காலம்:226–0 Ma
சுராசிக் காலம் – Recent
Mosquito 2007-2.jpg
Female Culiseta longiareolata
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: இருசிறகிப் பூச்சிகள்
துணைவரிசை: Nematocera
உள்வரிசை: Culicomorpha
பெருங்குடும்பம்: Culicoidea
குடும்பம்: Culicidae
Meigen, 1818 [1]
Subfamilies
உயிரியற் பல்வகைமை
41 genera
ஆண்கொசு, தாவரச்சாறினை மட்டுமே உண்ணும்

கொசு (ஈழத்தமிழ்: நுளம்பு), குலிசிடை (culicidae) குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். இவை மெல்லிய உடல் மற்றும் ஓர் இணை இறக்கைகள், மற்றும் நீண்ட கால்களை கொண்டவையாகும். இவ்வகைப் பூச்சிகளில் பொதுவாக ஆண் கொசுக்கள் தாவரச்சாற்றைப் பருகும். பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும என்றாலும் பெண் கொசுக்களுக்குக்கூட ரத்தம் முதன்மையான உணவல்ல. ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் ரத்தம் குடிக்கின்றன. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது.[2] வீடுகளிலுள்ள கொசுக்கள் தாம் பிறந்த இடத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி தொலைவுக்குள்ளேயே நடமாடும் தன்மை கொண்டவை. அதற்காக அவை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கிற இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும். கொசுக்களில் உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்கிற ஒரு வகை, கடற்கரை ஓரமுள்ள நீர்நிலைகளில் வசிக்கும். அவை மனிதர்களையும் விலங்குகளையும் தேடி 50 முதல் 75 மைல் தொலைவுக்குக்கூடப் பயணம் செய்யும் தன்மையானவை. ஆண் கொசுக்கள் ஏறக்குறைய ஒரு வாரமே வாழுக்கூடியன. ஆண்கொசுக்கள் முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கிறன. கலவி முடிந்ததும் ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கிறது. பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதமே உயிருடன் இருக்கும். அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிட வேண்டும். ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது.[2]

கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும். இதனால் இதன் நுண்ணிய குழலுக்குள் குருதி செல்ல ஏதுவாக குருதியின் அடர்த்தி குறைவதோடு, குருதி உறைகலும் தடுக்கப்படுகிறது. நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது.

பரப்பும் நோய்கள்[தொகு]

  1. மலேரியா (Malaria) – Anopheles gambiae எனும் வகையைச் சேர்ந்த பெண் நுளம்பால் பரப்பப்படும்
  2. சிக்குன்குனியா (chicken kuniya) – Aedes aegypti or Aedes Albopictus (Tiger mosquito) எனும் வகை நுளம்பால் பரப்பப்படும்
  3. மூளைக்காச்சல் (encephalitis) – Culex tarsalis எனும் வகை நுளம்பால் பரப்பப்படும்
  4. டெங்குக் காச்சல் (Dengue fever) – Aedes இனத்தைச் சேர்ந்த, பொதுவாக Aedes Aegypti எனும் வகை நுளம்பால் பரப்பப்படும்
  5. ஆனைக்கால் நோய் (Filaria) – Culex quinquefasciatus எனும் வகை நுளம்பால் பரப்பப்படும்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசு&oldid=2318967" இருந்து மீள்விக்கப்பட்டது