தெப்பத் திருவிழா
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தெப்பத் திருவிழா என்பது இந்து சமய கோயில்களின் குளங்களில் நிகழ்த்தப்படும் விழாவாகும். [1]இத்திருவிழாவின் பொழுது இறைவனை தெப்பத்தில் வைத்து குளத்தில் மிதக்க விடுகிறார்கள். தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தினைச் சுற்றி தெப்பத்தில் இறைவனை வைத்து வலம் வந்து இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை ஆண்டுக்கொரு முறை கோயில்களில் கொண்டாடுகிறார்கள்.
சொல்லிலக்கணம்[தொகு]
தெப்பம் என்பது படகினைக் குறிக்கின்ற சொல்லாகும். [2]
தெப்ப உருவாக்கம்[தொகு]
தெப்பத்தின் அடிப்பகுதியாக காலி பீப்பாய்களை வரிசையாக இணைத்து அவற்றின் மீது மூங்கில்களையும், மரங்களையும் கட்டித் தெப்பத்தினை உருவாக்குகிறார்கள். இதன் மீது சித்திரத் தட்டிகள், அலங்காரப் பொருள்களை இணைக்கின்றார்கள். பெரும்பாலும் இரவு வேளைகள் தெப்பதிருவிழா நடைபெறுவதால், வர்ண மின் விளக்குகள் அலங்காரமும் செய்யப்படுகிறது.
சித்திரத் தட்டிகளால் மண்டபம் போல உருவாக்கப்பட்ட அமைப்பின் நடுவே இறைவனை வைத்து அலங்காரம் செய்கின்றார்கள்.
விழாக் காரணம்[தொகு]
பிறவியெனும் கடலில் விழுந்தவர்களை இறைவினின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை அறியத்தருவதற்காக இவ்விழா நடைபெறுகிறது.
புகழ்பெற்ற தெப்பங்கள்[தொகு]
- மதுரை - வண்டியூர் தெப்பக்குளம்
- திருவாரூர் - கமலாலயம் தெப்பக்குளம்
- மன்னார்குடி - ராஜகோபாலசுவாமி தெப்பக்குளம்