கால்
Jump to navigation
Jump to search
கால் என்பது விலங்குகளின் உடலைத் தாங்குவதற்கும், நடப்பதற்கும் பயன்படும் உடல் உறுப்பாகும். விலங்குகளுக்குக் கால்கள் சோடிகளாக அமைந்துள்ளன. மனிதரும் பறவைகளும் இரு கால்களும் விலங்குகள் நான்கு கால்களும் கொண்டிருக்கின்றனர். சில ஊர்வன வகைகள் சில நூறு கால்கள் கொண்டுள்ளன.
ஈ போன்ற சில பூச்சி வகைகள், கால்களால் முகர்வதற்கும் மற்றும் சுவைப்பதற்கும் திறன் பெற்றுள்ளன.
கணுக்கால்[தொகு]
![]() |
விக்சனரியில் கணுக்கால் என்னும் சொல்லைப் பார்க்கவும். |
கணுக்காலுக்குக் கீழே, பாதம் உள்ளது.மேலே, கெண்டைக்கால் உள்ளது. பாதத்தையும், மேற்புற கால் பகுதிகளான தொடை,முட்டி, கெண்டைக்கால் பகுதிகளைப் பாதத்துடன் இணைப்பது, கணுக்கால் மூட்டு ஆகும்.
பாதம்[தொகு]
காலின் அடிப்பகுதி பாதம் எனப்படுகிறது. இதன் எலும்பு அமைவுகள் உடல் எடையைத் தாங்கும் விதத்தில் அமைந்துள்ளதே இதன் சிறப்பு ஆகும். விலங்கினங்களில் இச்சிறப்பு, மாறுபட்டு, மேலோங்கி இருக்கிறது.