உள்ளடக்கத்துக்குச் செல்

முதுகு துடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுகுத் துடுப்பு-சுறா

முதுகுத் துடுப்பு (dorsal fin) என்பது கடல் வாழ் உயிாினங்கள் மற்றும் நன்னீாில் வாழக் கூடிய முதுகெலும்புள்ள உயிாினங்களுக்கு முதுகுப்புறத்தில் காணக்கூடிய துடுப்பாகும். இவை பொதுவாக அனைத்து மீன்களுக்கும், பெரு மீன்களுக்கும் (திமிங்கலம், ஓங்கில்(டால்பின்), கடற்பன்றி) மற்றும் அழிந்து போன உயிாினமான இத்தியோசாரஸ் ஆகியவற்றில் காணப்படுகின்றன. மீனினத்தைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு துடுப்புகள் உள்ளன. வனவிலங்கு உயிாியலாளர்கள் தனிப்பட்ட புனைப்பெயர்களையும் அவற்றின் வடிவத்தைப் பொறுத்தும் அவை பெரு மீன்களில் எங்கிருந்து உருவாகின்றது என்று அவர்கள் கண்டறிந்தனர். எலும்பு அல்லது குருத்தெலும்பானது முதுகுத் துடுப்பின் அடிப்பகுதியை தாங்கும் விதமாக அமைந்துள்ளது. இதற்கு பெயர் டொிஜியோபோரஸ் ஆகும்.

பணிகள்

[தொகு]

முதுகுத் துடுப்பின் முக்கிய பணியே விலங்கு சுழலும் போது அதன் நிலைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் திடீரென விலங்கு திரும்புவதற்கும் பயன்படுகிறது. சில சிற்றினங்கள் வேறு வகைகளிலும் பயன்படுத்திக் கொள்கின்றன. சூாிய மீன்கள் முதுகுத் துடுப்பை நீரைத் தள்ளுவதற்குப் பயன்படுத்துகிறது. கெளிற்று மீன்கள் முதுகுத் துடுப்பை வைத்து தமது இரையைச் சுற்றி வளைத்து வேட்டையாடுகின்றன. சில மீன்கள் முதுகுத் துடுப்பை தன் பாதுகாப்புக்காக பயன்படுத்துகின்றன, அத்துடுப்பில், முட்களும் விசமும் உள்ளன. எடுத்துக்காட்டாக, முட்கள் உள்ள நாய் மீன் மற்றும் போர்ட ஜக்சன் சுறாவிற்கு முதுகுத் துடுப்பில் முட்கள் உள்ளன. இவை விசத்தை சுரக்கக் கூடிய தன்மை கொண்டவை.

பில்மீன்களின் முதுகுத் துடுப்பு முக்கியமானது. சூரை மீன், கானாங்கெளுத்தி மற்றும் சாம்ராய்டு மீன்களைப் போன்று பில்மீன் நீாில் நீந்தும் போது தன் முதுகுத் துடுப்பை உடல் பள்ளத்திற்குள் உள்வாங்கிக் கொள்கிறது.[1] பில்மீன் இனங்களை எளிதில் கண்டறியலாம் ஏனெனில், ஒவ்வொரு வகையான பில்மீன்களுக்கும் முதுகுத் துடுப்பானது வடிவம், அளவு, உடலில் அமைந்திருக்கும் இடம் மற்றும் வண்ணம் மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, வெள்ளை மார்லின் மீனின் முதுகுத் துடுப்பானது முன்பக்க விளிம்பானது வளைந்தும் கருப்பு புள்ளிகளாலும் நிரப்பப்பட்டுள்ளது. மிகப் பொிய அல்லது பாய்மரம் போன்ற முதுகுத் துடுப்பை பாய்மர மீன் கொண்டுள்ளது, ஆனால் பெரும்பாலான நேரங்கள் சுருக்கியே வைத்துள்ளது. பாய்மர மீன் தன் முதுகுத் துடுப்பை சிறிய மீன்கள் கூட்டம் வரும் போதும், அதிக செயல்பாட்டிற்குப் பின் ஓய்விற்காகவும் விாிக்கிறது.[1][2]

அமைப்பு

[தொகு]

முதுகுத் துடுப்பானது, மையம் நோக்கியது மற்றும் இணையில்லாதது என வகைப்படுத்தப் படுகிறது. இவ்வகையானது முதுகின் நடுக்கோட்டுப் பகுதியில் சில நீர் வாழ் முதுகெலும்புள்ளவைகளுக்கு அமைந்துள்ளது. டிலோஸ்ட் மீனின் முட்டைக்குள் கரு வளர்ச்சியின் போது தோலுக்கிடையே வால் துடுப்பு மடிப்புக்குள் இருந்து முதுகுத் துடுப்பு வளர்கிறது.[4] குடம்பிக்குரிய (larva) பருவத்தின் போது எலும்பு வளர்ச்சியனது மையத் துடுப்புக்கு ஆதரவாக வளர்ச்சியடைந்த மீன்களில் காணப்படுகிறது, இது தான் டொிஜியோபோரஸாக மாறுகிறது. டொிஜியோபோரில் உள்ள எலும்பு மூலங்கள் யாதெனில் அடித்தட்டுகள் மற்றும் ஆரத்தட்டுகள் ஆகும். அடித்தட்டுகள், முதுகுத் துடுப்பின் அடிப்பகுதியில் காணப்படும், இது உடம்பினோடு மிக நெருக்கமாக அமைந்திருக்கும். ஆரத்தட்டுகள், உடம்பிலிருந்து வெளிப்புறமாகச் செல்கிறது,[4] இவை மற்ற துடுப்புகளைத் தாங்கிக் கொள்கின்றன. இந்த இரண்டு மூலங்களும் உடல் உறுப்புகளின் நடுஊடுவரைக்கு மேல் உள்ள சதைப்பகுதியை இணைப்பதற்கான பகுதியாக உள்ளது.[5] டொிஜியோபோரின் அடித்தட்டுக்கு எதிராக இந்தச் சதை சுருங்கியும் இழுத்தும் உடலின் ஒரு பக்கமாக செயல்படும்போது மீன் நீாில் உறுதியாக நீந்திச் செல்ல உதவுகிறது.[5] இந்த வகை மீனினங்களின் துடுப்புகள் இரண்டு முக்கிய பகுதிகளாக பிாிக்கப்பட்டுள்ளது.[5] முதல் பகுதியானது கீழ்த்தோல் துடுப்பாரை, இது லெபிடோடிரைசியா எனப்படுகிறது. மற்றும் இரண்டாம் பகுதியானது, உள்எலும்பின் அடிப்பாக சதைப்பகுதியோடு இணைந்துள்ளது.[4]


மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Aquatic Life of the World pp. 332–333, Marshall Cavendish Corporation, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761471707.
  2. Dement J Species Spotlight: Atlantic Sailfish (Istiophorus albicans) littoralsociety.org. Retrieved 1 April 2012.
  3. Lingham‐Soliar T (2005) "Dorsal fin in the white shark, Carcharodon carcharias: A dynamic stabilizer for fast swimming" Journal of Morphology, 263 (1): 1–11. எஆசு:10.1002/jmor.10207 pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 4.2 Tohru, Suzuki (2003). "Differentiation of chondrocytes and scleroblasts during dorsal fin skeletogenesis in flounder larvae". Development, Growth, and Differentiation 45: 435–448. 
  5. 5.0 5.1 5.2 Barton, Michael (2007). Bond's Book of Fish (3rd ed.). The Thompson Corporation. p. pp.37-39, 60-61. {{cite book}}: |page= has extra text (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுகு_துடுப்பு&oldid=3623332" இலிருந்து மீள்விக்கப்பட்டது