உள்ளடக்கத்துக்குச் செல்

கடற்கரை வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rugged coastline of the West Coast Region of New Zealand

கடற்கரை அதன் வளைவு, அமைப்பு, சரிவு, இடம்பெயர்வு, தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் எளிமையாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் ஜான்சனின் வகைப்பாட்டு முறை அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் கடற்கரை நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஜான்சன்என்பவரது வகைப்பாடு முறைப்படி கடற்கரையின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.[1][2][3]

வகைகள்

[தொகு]

1) அமிழ்ந்த கடற்கரை 2) மேலெழுந்த கடற்கரை 3) நடுநிலைக் கடற்கரை 4) கூட்டுக் கடற்கரை

அமிழ்ந்த கடற்கரை

[தொகு]

நிலம் தாழ்வாகவோ அல்லது கடல்மட்டம் உயர்வதாலோ எற்படும் கடற்கரை ‘அமிழ்ந்த கடற்கரை’ ஆகும். இந்தியாவின் மேறகுக் கடலோரப் பகுதி (கொங்கணம் முதல் கர்நாடகம் வரை) அமிழ்ந்த கடற்கரையாகும். கிழக்குக் கடற்கரைப்பகுதியில் அமைந்த நிலப்பகுதி கடலில் அமிழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. (காவிரிப்பூம்பட்டினம்)

அமிழ்ந்த கடற்கரையானது நிலம் தாழும் போது தோன்றினால் ஆறுகளின் முகத்துவாரத்தில் ஓத முகங்கள் தோன்றுகின்றன. இவற்றிற்கு ஓத முகக்கடற்கரை என்பது பெயராகும் (Earnestine coast) உயர்ந்த நிலப்பகுதி தாழும்போது பள்ளத்தாக்கு முகத்துவாரங்களில் புனல்வடிவ நுழைவுகள் ஏற்படுகின்றன. இவை நிலத்திற்க செல்லச் செல்ல ஆழம் மற்றும் அகலம் குறைந்து காணப்படுகின்றன. கோவாவில் இந்த வகையான கடற்கரை உள்ளது. இதற்கு ஃபியர்டு கடற்கறை என்ற பெயர். இணையாக அமைந்துள்ள மலைத்தொடர்கள் மூழ்கி ஏற்படும் கடற்கரை டால்மேஷியன் கடற்கரை எனப்படும். மணல் திட்டுகளும், தீவுகளும் இக்கடற்கரையோரம் அமைந்திருக்கும்.

மேலேழுந்த கடற்கரை

[தொகு]

நிலம் மேலெழுவதாலோ அல்லது கடல் மட்டம் தாழ்வதாலோ ஏற்படும் கடற்கரை ‘மேலெழுந்த கடற்கரை’ ஆகும். கடற்கரை மேலெழுந்து மணல் திட்டுகளும் காயல்களும் தோன்றுகின்றன. கிழக்குக் கடற்கரையிலுள்ள பழவேற்காடு ஏரி, சில்கா ஏரி போன்ற காயல்கள் கடலோர மணற்குன்றுகளுக்கு அடுத்து காணப்படுகிறது. எனவே இவை மேலெழுந்தவை ஆகும். மேலும் மலைப்பாங்கான கடலோரம் மேலெழுந்தவை ஆகும். மேலும் மலைப்பாங்கான கடலோரம் மேலெபந்தால் சரிவு மிகுந்த கடற்கரை தோன்றுகிறது. கரடு முரடாகக் காணப்படும் இவ்வகைக் கடற்கரை கர்நாடக மாநிலத்தில் உள்ளது.

நிடுநிலைக்கடற்கரை

[தொகு]

கடல்மட்டம் அல்லது நீர்மட்டத்தில் எவ்வித மாற்றமுமின்றிக் காணப்படுவது. புதிய படிவுகள் கடலை நோக்கி வளர்ச்சியடைவதால் தோன்றம். இவை டெல்டா, எரிமலை, பவளப்பாறை, பனியாற்றுவண்டல், வண்டல் சமவெளி, பிளவு என ஆறுவகைகளாக அமைகின்றன.

கூட்டுக்கடற்கரை

[தொகு]

நடுநிலைக் கடற்கரையில் உள்ள ஆறுவகைகள் இரண்டு அல்லது மூன்று வகைக் கடற்கரைகள் சேர்ந்து காணப்படும் கடற்கரையாகும்.

உசாத்துணை

[தொகு]

மேற்பார்வை நூல், புவிப்புறவியல். அனந்த பத்மநாபன். என்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "coast". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. Retrieved 2024-07-19.
  2. "Coastline". Merriam-Webster Dictionary. Retrieved 2024-07-19.
  3. Nagelkerken, Ivan, ed. (2009). Ecological Connectivity Among Tropical Coastal Ecosystems (in ஆங்கிலம்). டோர்ட்ரெக்ட்: இசுபிரிங்கர் பதிப்பகம். doi:10.1007/978-90-481-2406-0. ISBN 978-90-481-2405-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்கரை_வகைகள்&oldid=4164941" இலிருந்து மீள்விக்கப்பட்டது