கிழங்கான்
தோற்றம்
| கிழங்கான் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | சில்லாஜினிடே
|
| பேரினம்: | சில்லாகோ
|
| இனம்: | சி. சிகாமா
|
| இருசொற் பெயரீடு | |
| சில்லாகோ கிகாமா (பார்சாகல், 1775) | |
| கிழங்கான் மீன்களின் பரம்பல் | |
கிழங்கான் (northern whiting, silver whiting அல்லது sand smelt; உயிரியல் பெயர்: Sillago sihama)[1] என்பது ஒரு கடல்வாழ் மீன் வகையாகும். இவை மேற்கில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கிழக்கில் ஜப்பான் மற்றும் இந்தோனேசியா வரை உள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படுகின்றன. மேலும் சுயஸ் கால்வாய் வழியாக நடுநிலக்கடல் பகுதியில் ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளன. ஊணுண்ணியான இவை, பலவகையான கடற்புழுக்களையும் ஓட்டுக் கணுக்காலிகளையும் உட்கொள்கின்றன. இந்தோ-பசிபிக் முழுவதும் கிழங்கான் மீன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது பெரும்பாலும் சீன் வலைகள் மற்றும் வார்ப்பு வலைகளால் எடுக்கப்பட்டு புதியதாக சந்தைப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Common Names List - Sillago sihama". www.fishbase.se. Retrieved 2022-05-21.