கோளமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோளமீன்
Pufferfish
Tetraodon-hispidus.jpg
வெண்புள்ளி கோளமீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
துணைவகுப்பு: Neopterygii
உள்வகுப்பு: Teleostei
வரிசை: Tetraodontiformes
குடும்பம்: Tetraodontidae
பொனபார்ட், 1832

கோளமீன் (tetraodontidae, pufferfish, balloonfish, blowfish, bubblefish; இலங்கை வழக்கு: பேத்தையன் ) என்பது ஒருவகை மீனினமாகும்.[1] இம்மீனின் உடல் குட்டையாகவும், தடித்த, உருளை வடிவமாக பலூன்போல தோற்றமளிக்கக்கூடியது. இதன் மேலுதடும் கீழுதடும் மற்ற மீன்களைப் போலன்றி கடினமாகவும், அரைக்கோள வடிவமாகவும் இருக்கும். பார்ப்பதற்கு பன்றியின் வாயமைப்பை ஒத்திருக்கும். செதில்களற்ற உடலின் மேல் சிறிதும் பெரிதுமான முட்கள் காணப்படும். ஆபத்தான நேரத்தில் இவை தம் உணவுக் குழலைக் காற்றால் நிரப்பிக் கோள வடிவை அடைகின்றன. அப்போது அதன் தோல் விரிவுற்று, முட்கள் வெளியே நீட்டியபடி, அச்சந்தரும் தோற்றத்துடன் மிதந்து கொண்டிருப்பதால் இதற்கு முள்ளம்பன்றி மீன் என்ற பெயரும் உண்டு. ஜப்பான் கடல் பகுதில் காணப்படும் இவ்வகை மீன்கள் நச்சுத் தன்மை கொண்டதாக உள்ளன.[2] இதன் உடலின் மேல் சிறியதும், பெரியதுமாகக் காணப்படும் முட்களில்தான் விஷம் தேங்கி நிற்கும். இந்த நச்சு தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மீன்களின் உடலிலிருக்கும் பாக்டீரியாக்களில் இருந்துதான் இந்த நஞ்சு உருவாகிறது.

ஜப்பானில் இந்த மீன் பிரபல உணவாக உள்ளது. இந்த மீனின் நச்சு முட்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டு மசாலை போட்டுப் பொரித்து சாப்பிட்டும், சூப் வைத்தும் குடிக்கிறார்கள். ஜப்பானில் இந்த மீனைக் கொண்டு தயாராகும் சூப்பை ‘பூகு சூப்’ என்கின்றனர். இந்த மீனை வெட்டி, சமைத்துச் சாப்பிட மூன்று ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது, அதன்பிறகு இந்த மீனைச் சமைக்க உரிமம் பெறவேண்டியது அவசியம். உரிமம் பெற ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினாலும், சிலர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Froese, R.; D. Pauly (eds.). "Family Tetraodontidae – Puffers". FishBase. 2017-08-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. in Japanese Pufferfish Feeds Search for Pain Drugsவால் ஸ்ட்ர்ட் 30 செப்டம்பர் 2015 சேனல்
  3. ஆதலையூர் சூரியகுமார் (8 மார்ச் 2017). "காரணம் ஆயிரம்: விஷ மீன்களின் விருந்து!". கட்டுரை. தி இந்து. 8 மார்ச் 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோளமீன்&oldid=3527146" இருந்து மீள்விக்கப்பட்டது