பேச்சு:கோளமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

கோளமீன் என்ற பெயர் எங்கிருந்து பெறப்பட்டது? இந்த வகையை தென்னிலங்கையில் பேத்தையன் என்று அழைக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 02:07, 24 மே 2015 (UTC)

பாகிம், இங்கு நீங்கள் தலைப்பு மாற்றக் கோரிக்கை வைத்தது தவறாகும். கோளமீன் என்பது தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கேயும் வழக்கில் இருக்கலாம். தெரியாமல் தலைப்பை மாற்றச் சொல்வது சரியல்ல. பேத்தையன் என்ற சொல்லைக் கட்டுரையில் தரலாம், அத்துடன் வழிமாற்றும் ஏற்படுத்தலாம். @Arulghsr:.--Kanags \உரையாடுக 02:57, 24 மே 2015 (UTC)

நீங்கள் நான் எழுதியதைச் சரிவரக் கவனிக்கவில்லை. கோளமீன் என்ற பெயர் எங்கிருந்து பெறப்பட்டது என்று முதலில் கேட்ட காரணம் அத்தகைய பெயர் எங்காவது இருக்கிறதா என்றறியத்தான். எங்காவது வழக்கிலிருக்கலாம் என்றால் அது எங்கேயென்று குறிப்பிடப்பட வேண்டும். பற்பல கட்டுரைகளில் உள்ள பெயர்ச் சொற்கள் வெறுமனே மொழிபெயர்ப்பாக அல்லது கட்டுரையை அமைத்தவரின் இடுகுறிப் பெயராக மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் பேச்சுப் பக்கத்தில் வெறுமனே கேள்வி கேட்டால் பெரும்பாலும் பதிலளிக்கப்படாமலிருப்பதுண்டு. உதாரணமாக தமிழ் நாடு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் நான் அதன் தலைப்பைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு ஆண்டுகள் சில கடந்தும் பதிலேதுமில்லை. அதனாற்றான் தலைப்பு மாற்றக் கோரிக்கையிட்டேன்.--பாஹிம் (பேச்சு) 07:33, 24 மே 2015 (UTC)

விளக்கம்[தொகு]

அன்பு பாஹிம் கோளமீன் என்ற பெயரை எனது சேகரிப்பில் உள்ள துளிர் அறிவியல் இதழில் (ஏப்ரல்-மே 1990) இருந்த கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.அருளரசன்Arulghsr (பேச்சு) 14:17, 25 மே 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோளமீன்&oldid=1859104" இருந்து மீள்விக்கப்பட்டது