உள்ளடக்கத்துக்குச் செல்

லார்க்கின்

ஆள்கூறுகள்: 1°29′24″N 103°42′20″E / 1.49000°N 103.70556°E / 1.49000; 103.70556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லார்க்கின்
நகரம்
Larkin
லார்க்கின் பேரங்காடி
லார்க்கின் பேரங்காடி
லார்க்கின் is located in மலேசியா
லார்க்கின்
லார்க்கின்
ஆள்கூறுகள்: 1°29′24″N 103°42′20″E / 1.49000°N 103.70556°E / 1.49000; 103.70556
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்ஜொகூர் பாரு
பரப்பளவு
 • மொத்தம்12.3 km2 (4.7 sq mi)
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
அஞ்சல் குறியீடு
80350
இடக் குறியீடு+6-07
போக்குவரத்துப் பதிவெண்கள்J

லார்க்கின் (ஆங்கிலம்: Larkin; மலாய்: Larkin; சீனம்: 拉慶; ஜாவி: لركين) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

ஜொகூர் பாரு மாநகரில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடமாக லார்க்கின் நகர்ப்பகுதி கருதப் படுகிறது. லார்க்கின் நகர்ப் பகுதியின் சுற்று வட்டாரத்தில் நிறைய விற்பனை மையங்களும், பேரங்காடிகளும், கேளிக்கை மையங்களும் உள்ளன. தவிர இங்குதான் புகழ்பெற்ற லார்க்கின் செண்ட்ரல் (Larkin Sentral) எனும் பொதுப் பேருந்து முனையமும் உள்ளது.

லார்க்கின் பேருந்து நிலையம்

[தொகு]

தீபகற்ப மலேசியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்வதற்கான பேருந்து சேவைகள் உள்ளன. இங்கு இருந்து தாய்லாந்து, பாங்காக் நகரத்திற்கும்; சிங்கப்பூர் பெருநகரத்திற்கும்; மலாக்கா, கோலாலம்பூர், சிரம்பான், குவாந்தான், ஈப்போ, பினாங்கு, கோத்தா பாரு போன்ற பெரும் நகரங்களுக்கும்; செல்ல 24 மணிநேரப் பேருந்து சேவைகள் உள்ளன. அதனால் மக்கள் நெரிசல் எப்போதும் காணப்படுகிறது.[2]

லார்க்கின் பேருந்து நிலையம் ஜொகூர் பெருநகர மையத்திற்கு மிக அருகில் அமைந்து உள்ளது. ஜொகூர் பாருவில் உள்ள மிகப்பெரிய நிலையமாகும். தீபகற்ப மலேசியா மற்றும் சிங்கப்பூரின் பெரும்பகுதிக்கான மைய இடமாகும். ஒரே சமயத்தில் 50 பேருந்துகளை நிற்க வைக்கும் வகையில் மூன்று மாடிகளைக் கொண்ட வளாகமாகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kawasan Pentadbiran MBJB". Official Portal of Johor Bahru City Council (MBJB). Archived from the original on 25 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  2. "Johor Larkin Bus Terminal is a built up complex in the city of Larkin. Situated very close to Johor and its city center. The terminal is a central pickup point for much of Peninsular Malaysia and Singapore. This is the largest terminal of its kind in Johor Bahru". www.busonlineticket.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  3. "மாநில எல்லைகளைக் கடந்து பயணம் செய்யும் மலேசியர்கள்". பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Larkin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=லார்க்கின்&oldid=3606771" இலிருந்து மீள்விக்கப்பட்டது