முத்தியாரா ரினி

ஆள்கூறுகள்: 1°31′N 103°40′E / 1.517°N 103.667°E / 1.517; 103.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்தியாரா ரினி
நகரம்
Mutiara Rini
முத்தியாரா ரினி நகர்ப்பகுதி
முத்தியாரா ரினி நகர்ப்பகுதி
முத்தியாரா ரினி is located in மலேசியா
முத்தியாரா ரினி
முத்தியாரா ரினி
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 1°31′N 103°40′E / 1.517°N 103.667°E / 1.517; 103.667
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் ஜொகூர் பாரு
மாநகரம்இசுகந்தர் புத்திரி
உருவாக்கம்1996
அரசு
 • நகரண்மைக் கழகம்இசுகந்தர் புத்திரி மாநகராட்சி
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு81300
மலேசியத் தொலைபேசி எண்+6-07
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்J
இணையதளம்www.mbip.gov.my

முத்தியாரா ரினி, (மலாய்: Taman Mutiara Rini; ஆங்கிலம்: Mutiara Rini; சீனம்: 麗寧鎮)) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறம் ஆகும். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

இந்த நகரம் 1996-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதற்கு முன்பு இந்த இடம் ரினி தோட்டம் என்று அழைக்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு முத்தியாரா ரினி என்று அழைக்கப்படுகிறது. முத்தியாரா ரினி நகர்ப் புறத்தில் 10,000 மலிவுவிலை வீடுகளும் ஆடம்பர வீடுகளும் உள்ளன.

ரினி தோட்டம்[தொகு]

மலேசியாவில் மிகப் பழமையான தோட்டங்களில் ரினி தோட்டமும் ஒன்றாகும். 1900-ஆண்டுகளில் உருவானது. ரினி தோட்டம் ஒரு ரப்பர் தோட்டம். பின்னர் எண்ணெய் பனை தோட்டமாக மாற்றம் கண்டது. 1996-க்குப் பின்னர் இந்த தோட்டம் முத்தியாரா ரினி (Mutiara Rini) என்று அழைக்கப் படுகிறது.[2]

ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி[தொகு]

முத்தியாரா ரினி நகர்ப் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி 1958-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்தப் பள்ளியும் மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்து உள்ளது.

1985-ஆம் ஆண்டில், ரினி தோட்டத்தில் ஒரு வீட்டமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி, லீமா கெடாய் (Lima Kedai) எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய மாற்றுப் பள்ளி, இப்போதைய முத்தியாரா ரினி வீட்டு மேம்பாட்டாளரால் கட்டப்பட்டது. பள்ளியின் பரப்பளவு 1 எக்டர். 8 வகுப்பறைகளைக் கொண்டது.[3]

2014-ஆம் ஆண்டில் புதிய கட்டடம்[தொகு]

புதிய பள்ளி 1996 நவம்பர் மாதம் 4-ஆம் தேதி செயல்படத் தொடங்கியது. 2000-ஆம் ஆண்டில், நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் போன்றவை; பொதுமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதிகளின் உதவியுடன் கட்டப்பட்டன. மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்தது

பின்னர் 2001-ஆம் ஆண்டு இப்பள்ளியில் மேலும் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 2003-ஆம் ஆண்டு பள்ளி உணவகம் புதுப்பிக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டின் இறுதியில் கணினிக் கல்விக்காக மற்றொரு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. பற்பல் போராட்டங்களுக்குப் பின்னர் 2014-ஆம் ஆண்டில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.[4]

2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தப் பள்ளியில் 683 மாணவர்கள் பயில்கிறார்கள். 45 ஆசிரியர்கள் சேவை செய்கிறார்கள்.[5]

இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
முத்தியாரா ரினி SJK(T) Ladang Rini ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் பாரு 683 45

ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி தொடர்பான படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mutiara Rini
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தியாரா_ரினி&oldid=3504221" இருந்து மீள்விக்கப்பட்டது