தாமான் ஜொகூர் ஜெயா

ஆள்கூறுகள்: 1°32′N 103°49′E / 1.533°N 103.817°E / 1.533; 103.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமான் ஜொகூர் ஜெயா
Taman Johor Jaya
ஜொகூர்
தாமான் ஜொகூர் ஜெயா பேருந்து நிலையம்
தாமான் ஜொகூர் ஜெயா பேருந்து நிலையம்
தாமான் ஜொகூர் ஜெயா is located in மலேசியா
தாமான் ஜொகூர் ஜெயா
      தாமான் ஜொகூர் ஜெயா
ஆள்கூறுகள்: 1°32′N 103°49′E / 1.533°N 103.817°E / 1.533; 103.817
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் ஜொகூர் பாரு
அமைவு1983
அரசு
 • வகைஜொகூர் பாரு மாநகராட்சி
 • ஜொகூர் மாநில சட்டமன்றம்லியோவ் சாய் துங் (ஜசெக)
பரப்பளவு
 • மொத்தம்5.9 km2 (2.26 sq mi)
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்66,000[1]
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு81100

தாமான் ஜொகூர் ஜெயா (ஆங்கிலம்: Taman Johor Jaya; மலாய்: Taman Johor Jaya; சீனம்: 柔佛再也; ஜாவி: جوهر جاي) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், ஜொகூர் பாருவில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதி ஆகும்.[2]

தாமான் ஜொகூர் ஜெயா பெரும்பாலும் குடியிருப்பு வீடுமனைப் பகுதிகளைக் கொண்டது. அத்துடன் இந்தப் புறநகர்ப்பகுதி இலகுவான தொழில்துறை மற்றும் வணிக வளாகங்களையும் கொண்டுள்ளது. இங்கு வாழும் தமிழர்களில் பெரும்பாலோர் சிங்கப்பூரில் தொழில் செய்பவர்களாக உள்ளனர்.

வரலாறு[தொகு]

1983-ஆம் ஆண்டில் டெய்மன் மேம்பாட்டு நிறுவனம் (Daiman Development Berhad); ஜொகூர் ஜெயாவை உருவாக்கியது. முதல் கட்டமாக ஜொகூர் ஜெயாவில் ஒற்றை மாடி வீடுகள் கட்டப் பட்டன.[3]

1987-ஆம் ஆண்டு வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு அடைந்தன. ஆனால் கட்டப்பட்ட வீடுகள் அனாமதேயப் பேர்வழிகளால் உடைக்கப்பட்டு சேதம் அடைகின்றன எனும் செய்திகள் காரணமாக ஆரம்பத்தில் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தயங்கினர்.[4]

வீடமைப்புத் திட்டங்கள்[தொகு]

இருப்பினும் 1989 ஜனவரி மாதம் ஆங்கேரிக் (Anggerik); டெடாப் (Dedap); தெராத்தாய் (Teratai) எனும் மூன்று வீடமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என டெய்மன் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்தது. அந்தத் திட்டங்களில் ஒற்றை மாடி வீடுகள்; இரட்டை அடுக்கு மாடி வீடுகள்; கடைவீடுகள் மற்றும் விளையாட்டு வளாகம் போன்றவை கட்டப் படுவதற்கு திட்டமிடப் பட்டது.[5]

1992-இல் நிறைவு அடைந்த இந்த மூன்று வீடமைப்புத் திட்டங்களின் மூலமாக 11,132 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டன. 1992 - 1993-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கீம்போங் (Keembong) மற்றும் சரோஜா (Seroja) வீடமைப்புத் திட்டங்கள் நிறைவு அடைந்தன.[6]

மக்கள்தொகை[தொகு]

2010-ஆம் ஆண்டு வீட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஜொகூர் ஜெயாவில் மொத்தம் 16,000 குடும்பங்கள் உள்ளன. அங்கு வாழும் மக்களில் 49% சீனர்கள்; 44% மலாய்க்காரர்கள்; மற்றும் 7% இந்தியர்கள்.[7]

கணிசமான எண்ணிக்கையில், தொழிலாளர்களாக வேலை செய்யும் இந்தோனேசியர்கள்; நைசீரியர்கள்; வியட்நாமியர்கள் போன்ற வெளிநாட்டினரும் உள்ளனர்.

மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமான்_ஜொகூர்_ஜெயா&oldid=3637377" இருந்து மீள்விக்கப்பட்டது